Kalaikesari
You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் வீட்டில் இந்த பொருட்கள் சரியான திசையில் உள்ளதா?

2018-06-13


எம்மை சூழவுள்ள சுற்றுச் சூழலில் நேர்மறை, எதிர்மறை ஆற்றல் நிரம்பியுள்ளது. எதிர்மறை ஆற்றலின் விளைவுகளை குறைப்பதற்கு அல்லது முழுவதுமாக அகற்றி, நம்மை சுற்றிலும் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கான வழிமுறைகள்   வாஸ்து சாஸதிரத்தில் கூறப்பட்டுள்ளன. .மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்களை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலின் அளவை ஈர்க்கும். இங்கு நம் வீட்டில் உள்ள பொதுவான சில பொருட்களும், அதை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.


கடிகாரம் 


நம் வீட்டில் உள்ள மிக முக்கியமான பொருள் இது. நம்மை நேரத்துக்கு ஏற்ப வழிநடத்துவதும் இக்கடிகாரம் தான். சுவர்கடிகாரத்தை நேர்மறை ஆற்றலை உண்டாக்கக்கூடிய திசைகளான கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.


*கடிகாரத்தை கதவுகளுக்கு மேலேயோ ,  வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றிலோ  மாட்டக்கூடாது. ஏனெனில் தெற்கு எமதர்ம ராஜனின் திசையாகும். 


முகம் பார்க்கும் கண்ணாடி 


முகம் பார்க்கும் கண்ணாடியை தவறான திசையில் மற்றும் தவறான இடத்தில் வைப்பதனால் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும்.
* வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.
 * அதேப் போல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. 
* குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேலே கண்ணாடி இருக்க வேண்டும்

 

7 குதிரைகள் கொண்ட ஓவியம் 


பெரும்பாலானோர்  தமது வீட்டு சுவரை அலங்கரிக்க வாங்கும் ஓவியங்களில் ஒன்றுதான் இது. 7 குதிரைகள் ஓடும்படியான ஓவியமானது நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர்புறத்தில் தொங்க விடதல் நேர்மறை ஆற்றலை உண்டாக்கும்.
* குதிரை ஓவியத்தை நுழைவு வாயிலை நோக்கி தொங்க விடக்கூடாது.
 * அதேப் போல் சமையலறை, குளியலறையை நோக்கியும் வைக்கக்கூடாது.

 

மணி ப்ளாண்ட் 


மணி ப்ளாண்ட் டை ஒருவர் வீட்டில் வளர்ப்பதால் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது அனைவரதும் நம்பிக்கை. அதே போல் இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே சிறந்தது.

 

ஓடும் நீர் போன்ற காட்சிப்பொருள்


 அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இதுப்போன்ற பொருட்களை வாங்கி அலங்கரிப்பார்கள். இப்படி நீர் ஓடுவது போன்ற காட்சிப்பொருளில் இருந்து வெளிவரும் சப்தம், மனதை அமைதியாக வைக்க உதவுதுடன் ஒரு ஆன்மீக உணர்வைஏற்படுத்துகிள்றது. அதோடு வீட்டை நோக்கி அதிர்ஷ்டம் தேடி வரவும் செய்யும் என்கிறது வாஸ்து சாஸ்த்திரம்.