2018-07-05
இந்து சமயத்தவர்கள் விழாக்கள் மற்றும் விசேட தினங்களில் வாழை மரம், மாவிலைத் தோரணங்கள் கட்டடுவது ஒரு சம்பிரதாயமாக உள்ளது. தொன்றுதொட்டு வரும் இந்த வழமை ஏன் என நாம் சிந்தித்தால் நம்முன்னோர்களின் அறிவியல் இன்றைய விஞ்ஞானத்தையும் மிஞ்சி நிற்பதை நாம் அறியலாம்.
விஷேட நாட்களில் ஆலயம், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அவ் இடத்தில் பிரான வாயுவின் (ஒட்சிசன்) தேவை அதிகமாக இருக்கும். இதன்போது மூச்சுதிணறல் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே தான் மாசுபட்ட காற்றைத் தூய்மைப்படுத்தி, ஒட்சிசன் நிரம்பிய நல்ல காற்றாக மாற்றி வழங்குவதற்காக வாழை மரமும், மாவிலையும் விசேஷ நாட்களில் கட்டப்படுகின்றன.
இயற்கையுடன் இணைந்திருந்தால் என்றும் நன்மையே கிட்டும்