Kalaikesari
You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உணவு உண்ணும் போது பின்பற்ற வேண்டிய 10 விதிகள் - புசிப்பது பசிக்காக மட்டுமா?

2018-08-09


உணவில் அறு சுவையை தருவது எமது பாரம்பரியம் ஆனால் இன்று ஒருசுவையை சுவைப்பதற்கும் நேரம்இல்லாததால் கிடைப்பதை பசிக்காகப் புசிக்கின்றோம். 


உணவு உண்பதும் ஒரு கலைதான் அதை சரியாகச்செய்யும் போதுதான் உணவுவேளைபூரணமடைகின்றது. உணவு உண்ட திருப்தியும் எமக்குக் கிடைக்கின்றது. 


உணவு உண்ணும் விதிகளைச் சரியாக பின்பற்றுவதால் நாமது உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடிவதுடன் உணவு உண்ட திருப்தியும் ஏற்படும். 


இந்த விதிகளை நீங்களும் இன்றுமுதல் முயற்சி செய்து பாருங்கள். 


1. உணவு உண்ணும் போது இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும். 


2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும். 


3. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். ( வெள்ளை அணுக்களுக்குஇணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்) 


4. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று சாப்பிட வேண்டும். வாயைத் திறந்துசாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தை பாதிக்கும். 


5. சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும்இல்லாமல் உணவை உற்று நோக்கிச் சாப்பிடவேண்டும். 


6. உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படும்போது உணவை முழுமையாகஉணர முடியும் 


7. சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பதுசெரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமில செரிவை குறைத்து தீங்கை ஏற்படுத்தும்)


8. உணவு உண்ணும்போது மன உளைச்சல், சண்டை, கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல்பார்த்துக்கொள்ள வேண்டும்.


9. சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கிசெரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல. 


10. குளித்தபின் 45 நிமிடம் சாப்பிடக் கூடாது . சாப்பிட்டபின் 2.5 மணி நேரம் குளிக்கக் கூடாது