You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குங்குமம் அணிவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மையா?

2018-11-08


பெண்கள் குங்குமம் அணியும்  பழக்கம் தமிழ் பண்பாடுகளில் மிக பழமையன முறையாகும். 
இன்றைய காலங்களில் திருமணமான பெண்கள் மட்டுமே நெற்றியில் குங்குமம் அணிகின்றார்கள்.  அதுவும் விழாக்கள் போன்ற கலாசார நிகழ்வுகளின் போதே காணமுடிகின்றது. ஆனால் குங்குமம் என்பது பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தொன்று தொட்டு அணியப்பட்டு வந்துள்ளது. 
புராண பாடல்களில் பெண்னை வர்ணிக்கும்போது அவரது நெற்றி திலகம் பற்றி கூறி உள்ளதை அறிய முடிகின்றது. பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
திருமணமான பெண்கள் மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுதே சிறந்த முறையாகும்.
குங்குமம் வைக்கும் போது பின்பற்ற வேண்டியவை
கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடுதல் வேண்டும்.
பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
குங்குமத்தில் மறைந்துள்ள அறிவியல்
குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது. தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

குங்குமம் அணிவதன் நம்பிக்கைகள்
மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.


ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்