You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பூஜை கிரியைகளில் தர்ப்பை புல்லின் அவசியம்

2018-12-04


இந்துக்களின் வழிபாடுகளிலும் வாழ்வியலிலும் தர்ப்பை புல்லுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இத்தை முக்கியதவம் ஏன். காரணம் தெரியாதவர்கள் இதனை மூடநம்பிக்கையாகவே பார்க்கின்றனர். சற்று ஆராய்து அறிவோமானால் வியக்க வைக்கும் அறிவியலை எம்முன்னோர்கள் எத்தனை அழகாக  வாழ்வியலில் மறைத்து வைத்துள்ளார்கள் என்ற உண்மை புலப்படும்.


தர்ப்பை என்பது  சுத்தமான புண்ணிய பூமியில் வளரும் ஒரு புல் இனம். இவ் புல் தண்ணீர் இல்லாமலும் வளரும் சிறப்பியல்பையும் அதே போன்று பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாது இருக்கும் இயல்பையும் கொண்டது. 


தர்ப்பை புல் கதிர்வீச்சுகலை அடக்கும்ஆற்றல் உடையது இதனாலையே  வேத மந்திரங்களை உச்சரிக்கும் போது தர்பைஅணியும் வழமை உருவாகி உள்ளது. பூஜைகள் மற்றும் கிரிகைகளில் பங்கு கொள்பவர்கள் தர்பையை  வலதுகை மோதிரவிரலில் அணிந்து கொள்கின்றார்கள். இதனால் இவர்கள் மந்திர உச்சரிப்பின் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். 


தர்பை  பவித்ரம், நான்கு வகையாக செய்யப்படுகின்றது .


ஒரு புல்லலை கொண்ட  செய்யப்படும் தர்பை ஈமக்கிரியைகளின் போது பயன்படுத்தப்படுகின்றது.


இரண்டு புற்களை கொண்ட  செய்யப்படும் தர்பை அன்றாடம் செய்யப்படும் வீடுகளில் வழிபாடு, கிரியைகளில் பயன்படுத்தப்படும்.


மூன்று புற்களை கொண்டு  செய்யப்படும் தர்பை முன்னேர்வழிபாடின் போதும் பயன்படுத்தப்படும்.


நான்கு  புற்களை கொண்ட  செய்யப்படும் தர்பை ஆலய கிரியைகளில் போதும் பயன்படுத்தப்படும்.

தர்ப்பை புல்லின்  காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள்,  குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். 


நாட்டுமருத்தவத்தில் தர்ப்பை புல்  பல நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுகின்றது. இனியேனும் தர்ப்பையின் மகததுவம் அறிந்து அதனை அணிவது சிறப்பு தரும்.