You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பெண்களுக்கு விரும்பியபடி மணவாழ்வு அருளும் கூடாரவல்லி தின வழிபாடு

2019-01-10


மார்கழியில் சிறப்பு தரும் பல விடயங்கள் இருந்தாலும் கிருஷ்னரின் வழிபாடு இவ் சிறப்புகளுக்கெள்லாம் சிறப்புத் தருவது. ஆண்டால் இவ் மாதத்தில் கிருஷ்னரை வழிபட்டு பாசுரங்கள் இயற்றினாள். இதில்   "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா'' என தொடங்கும்  பாசுரம் திருப்பாவையின் 27 ஆவது பாசுரம் ஆகும். இதைப் பாடியதும் கோதையாகிய ஆண்டாளை கோவிந்தன் திருமணம் செய்து கொண்டார்.

இருந்தாலும் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஸ்ரீ ஆண்டாள், முப்பது பாசுரங்களையும் பாடி முடித்தாள்.

கோபியருடன் கோவிந்தன் கூடி குளிர்ந்து பால் சோறு பொங்கி அதில் நெய் நிறைய விட்டு முழங்கை வரை வழியுமாறு உண்டு கழித்த நிகழ்வினை கூடார வல்லி தினத்தில் நினைவு படுத்துகின்றமை விசேட அம்சமாகும்.

ஆண்டாள்  27ஆவது பாடல் பாடிய தினம் கூடாரவல்லி என அழைக்கப்படும். பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர், 108 திரவியங்கள், மூலிகைகள், பூக்கள் மூலம் அமைக்கப்பட்ட பந்தலில் (கூடாரம்)  கூடாரவல்லி திருவிழா நடத்தப்படுகின்றது.  இன்றைய தினத்தில் பெருமாள் கோயில்களில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து இவ் பிரசாதத்தை பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம்.