You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




விரதம் இருப்பதன் மூலம் ஆன்மிக வாழ்விற்கு வளம்சேர்க்கும் முக்கிய மூன்று பண்புகள்

2019-03-13


ஆன்மீக வாழ்க்கைக்கு விரதம் என்பது இன்றி அமையாத ஒன்றாகும். ஒருவர் ஆன்மீக வாழ்வில் ஈடுபட வைராக்கியம், அப்யாசம், பக்தி ஆகிய மூன்று பண்புகள் முக்கியமானது. இவ் மூன்று பண்புகளை எமக்குள் தோற்றுவிப்பது விரதம் ஆகும்.
 எனவே தான் இந்து மதத்திவல் பல விரதங்கள் கூறப்பட்டுள்ளன. நாம் எடுத்துக்கொண்ட செயலை எப்பாடுபட்டாவது முடிக்கும் செயல் வைராக்கியம் விரதம் இருப்பதற்கு சங்கல்ப்பம் செய்யும் ஒருவர் அதில் நின்று விளகாது முழுவை செய்வதன் மூலம் இந்த பண்பு ஒருவரில் அதிகரிக்கின்றது. ஆன்மீக செயல்களை தொடர்ச்சியாக செய்வது முக்கியமாகும் இதற்கு பயிற்சி முக்கியமாகும். இந்த பயிற்சியை விரதம் தருகின்றது.


இறைவனிடம் முழுவதுமாக மனதை இறைவனிடம் அர்ப்பணிப்பது பக்தியாகும். இறைவன் மீது முழுமையான பக்தியை செலுத்துவதற்கு ஐபுலன்களை அடக்குதல் வேண்டும். இறை பக்தியில் ஆன்மீகவாதியின் லட்சணங்களான இவை விரதம் இருக்கும் பொழுது நம்மில் செயல்படத் தொடங்கும். இறைவனை நினைத்து உண்ணாமல் இருக்கும் பொழுது நம்மில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படுவதன் காரணமும் இதுதான்.


நமது சாஸ்திரம் பஞ்ச அவயங்களுக்கும் தனித்தனியே விரதங்களை வழங்கி உள்ளது.  இவற்றை பின்பற்றி மனதையும் உடலையும் கட்டுப்படுத்தி நமது உணர்வு உறுப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் அதன் சக்தியையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தமுடியும். இதன் மூலம் ஆன்மீக அனுபவத்தை மிக எளிதாக அடையலாம்.