You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மழையை வேண்டி தவளைக்குப் படையலிட்டு விசித்திர வேண்டுதல்!

2019-05-06


இயற்கை எப்போதும் எம்மொட்டுப்பாட்டில் செயற்படுவதில்லை. அதன் கோரத்தாண்டவத்தை உணரும் சந்தர்ப்பங்களில் தான் நாத்திகனும் ஆத்திகன் ஆகின்றான். அதனால் தான் பழங்குடி மக்கள் இயற்கையைக் கவுளாகப் போற்றி வழிப்பட்டுவந்தனர். 

 அத்துடன் இயற்கையிடம்  வேண்டுதல்களை வைப்பதற்கு  வித்தியாசமான நம்பிக்கைகளையும் சடங்குகளையும்  பின்பற்றுகின்றார்கள். மழை பொழிய, பொழிந்துகொண்டேயிருக்கும் மழையை நிற்க வைக்க எனப் பல பலவிதமான வேண்டுதல்கள் வைக்கப்படுகின்றன. தற்போதும் இப்படியான சடங்குகளை கிராமப்புறங்களில் காணலாம்.

மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றி வழிபடுவார்கள். ஒப்பாரி பாடியபடி மயானத்தை நோக்கிச் செல்லல், வீடு வீடாகச் சென்று அரிசியை தானமாகப் பெற்று உப்பில்லாத கூழ் காய்ச்சுதல்,  `மழைக்கன்னி வழிபாடு' போன்றன இவற்றில் சில.


தெய்வங்களை வேண்டிக்கொள்வதன் மூலம் மழையைப் பெறமுடியும் என்பது உலகளாவிய நம்பிக்கை. இச் நம்பிக்கை தொன்று தொட்டு இருந்ததாகக் கபிலர் இயற்றிய  சங்க இலக்கியத்தில், மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்' என்று தொடங்கும் பாடலின், மலையின் தெய்வமான முருகக்கடவுளுக்குப் பலியினைத் தூவி மழை வேண்டும் என்று மலைக்குடிகளான குறவர்கள் வேண்டுவதாகக் கூறும் வரிகள் உருதிசெய்கின்றன.
இதோ போல் பல சடங்குகள் மழையை வேண்டிச் செய்யப்படுகின்றன, இதில் விநோதமான சடங்குகளும் உள்ளன.

  இந்தியாவின் தர்மபுரிப் பகுதிகளில் , `தவளை நீரில் விடும் `சடங்கு ஒன்று நடைபெறுகின்றது. சிறுவர்களால் செய்யப்படும் இச் சடங்கு வித்தியாசமான ஒன்று. சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தவளை ஒன்றைப் பிடித்து களிமண்ணில் பொதிந்து பின்னர் அந்தத் தவளையை ஒரு பலகையில் வைத்துத் தூக்கிக்கொண்டு `மழைப்பாட்டு' என்னும் பாட்டைப் பாடிக்கொண்டே ஊரைச் சுற்றிவருவர்.

`பெய்யுமாலம்மா பெய்யுமாலோ
பேயாமழை பெய்யுமாலோ
நல்லமழை பெய்யுமாலோ  
நாடுசெழிக்கப் பெய்யுமாலோ
ஊசிபோல மின்னிமின்னி
ஊர்செழிக்கச் செய்யுமாலோ
காசுபோல மின்னி மின்னி
காடுசெழிக்கப் பெய்யுமாலோ
பணத்தைப் போல மின்னிமின்னி
பட்டணமெல்லாம் பெய்யுமாலோ' 

இப்படி ஊர்சுற்றிவரும் போது மக்களிடம் அரிசி, காசு முதலியவற்றை தானமாகப் பெறுவர். பின் அதில் படையல் இட்டு தவளைக்குப் படைத்து, பின் அந்தத் தவளையை ஏரியில் விடுவர். தவளை கத்தினால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின்  அடிப்படையிலேயே இந்த சடங்கு நடத்தப்படுகின்றது. இந்தச் சடங்கு மிகவும் பழைமையானது என்பதற்கு முக்கூடற்பள்ளுவில் வரும் `நீர்ப்படு சொரித்தவளை மழையைக் கூப்பிட்டுப் பெய்ய வைக்கும்' என்னும் வரியே ஆதாரம்.  இந்த விசித்திர சடங்கு இன்றும் நடைமுறையில் உள்ளது. 

- நன்றி விகடன்