You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




152 ஆண்டுகளாக அணையா அடுப்பு! இதுவே அன்னதானத்தின் சிறப்பு

2019-05-20


அன்னதானம், சொர்ண தானம், வஸ்திரதானம், கோதானம், பூ தானம், கண் தானம் என்று தானங்கள் பல வகைப்பட்ட போதிலும்  இவை அனைத்திலும் சிறந்த தானம் அன்னதானமாகவே விளங்குகின்றது. ஏனைய தானங்களின் மூலம் மனிதனின் மனதை திருப்தி அடைய செய்வது கடினம் அன்னதானம் மட்டுமே மனிதனை போதும் என்ற உணர்வுக்கு இட்டுச்செல்கின்றது. எனவே தான் இது சிறப்புபெறுகின்றது.


பிறர் பசியைப் போக்கும் அன்னதானமானது பாத யாத்திரை வருபவர்களுக்கு, அலய யாத்திரை வருபவர் களுக்கு, கிரிவலம் வருபவர்களுக்கு மற்றும் ஆலய மகோட்சவ காலங்களில் பக்தர்களின் பசி மற்றும் களைப்பை போக்குவதற்காகவும். எழை எளியவர்களுக்கு அவர்களின் ஏழ்மை போக்குதற்காகவும் வழங்கப்படுகின்றது. அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு. பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள் கூட சிறிய அளவில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம். 


அன்னதான செய்யும் வழக்கம் இந்தியாவில் தொன்று தொட்டு காணப்படுகின்றது. இதன் சிறப்பை விளக்குவதாக 152 ஆண்டுகள் தொடர்ந்து எரியும் வடலூரில் அணையா அடுப்பும், அணையா விளக்கயும் கூறலாம். அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்கம்பிள்ளையின் சத்யஞான சபை அருகில் உள்ள மண்டபத்தில், மூன்று வேளையும் பசிப்பிணி போக்கும் அன்னதானம் இன்றளவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 1867-ல் ஏற்றப்பட்ட அந்த அடுப்பு இன்றுவரை அணையாமல் இரு்து அன்னத்தைச் சமைத்துக் கொண்டே இருப்பது   ஆச்சரியத்தையும் அன்னதானத்தின் சிறப்பையும் காட்டிநிற்கின்றது.


அன்னதானம் செய்ய விசேட நாள் தேவையா?
இல்லை,உங்களிடம் எப்போது வசதி உள்ளதோ அதுவே அன்னதானம் செய்ய சிறந்த நாளாக கருதி கொள்ளுங்கள். அல்லது உங்கள் மனதில் ஒரு சங்கல்ப்பம் செய்து கொள்ளுங்கள் வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கவதாக. அதுவும் முடியாது என்றால் வருடம் ஒரு முறை அல்லது விழாக்களை முன்னிட்டு அன்னதானம் வழங்கலாம். நாட்டில் வரட்சி ஏற்படும் காலங்களில் விசேடமாக வழங்கலாம். உங்களது பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும், இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம். 

 

அன்னதானம் செய்ய இயலாதவர்கள், ‘பசி’ என்று சொல்லி வருபவர்களுக்கு ‘இல்லை’ என்று சொல்லாமல்  முகமலர்ச்சியோடு உணவளித்தாலே போதும். அன்புடனும், கருணையுடனும் அனைத்து உயிர்களுக்கும் செய்யும் தானங்கள், நம்முடைய அடுத்த பிறவி வரை பலன் கொடுக்கும். மீனுக்கு பொரி போடுவதும், யானைக்கு கரும்பு கொடுப்பதும், பசுவிற்கு கீரை, பழம், வைக்கோல், பருத்திக் கொட்டை கொடுப்பதும் கூட ஒரு வகையில் அன்னதானம் தான்.

அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது. அவர் களின் சந்ததிகளும் தழைத்தோங்க வழிகிடைக்கும். இருப்பவற்றை கொடுத்து இளைப்பாறச் செய்து உபசரித்தால் இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து, எந்நாளும் உதவி செய்வான் என்பது உண்மை.