You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இந்து மத வாழ்வியல்

2019-06-06


ஆதியான மதமாக அறியப்படும் இந்து மதமானது உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் மிகப்பெரிய தர்மமாகும். அதன் கோட்பாடுகள் கற்று அறியாதவர்களுக்கு மூடநம்பிக்கைகளாகவும், வினோதமாகவும் தோன்றினாலும் உலக சுற்றுச்சூழலின் இன்றைய நிலையை நோக்கும் போது இந்து மத வாழ்வியல் எத்தனை சிறந்தது என்பதை அறியமுடிகின்றது.

உணவு, உடை, உறையுள், வழிபாடு என அனைத்திலும் இயற்கையை ஒன்றிணைத்து அதன் நன்மை பெற்றுக்கொண்டும் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காமலும் வடிவமைக்கப்பட்ட வாழ்வியலே இன்று உலக சுற்றுச்சூழல்  பாதுகாபிற்க்கு அவசியமாகின்றது. 

கம்பளிப்பூச்சிகளின் நூலை ஆடையாகவும், இயற்கை தாவரங்களை  உணவாகவும், மரங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட குடில்களை வாழ்விடமாகவும் கொண்டு அனைத்திலும் இயற்கையின் பாதுகாப்பை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்ட இந்து மத வாழ்வியலுக்கு நிகர் வேரொன்றும் இருக்க முடியாது.

இவ்வாழ்வியலின் பெரும்பகுதி நவீன மயமாதலுடன் மாற்றம் பெற்றுள்ள போதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கருதி நாம் பின்பற்ற வேண்டிய பல வாழ்க்கை நடைமுறைகள் உள்ளன. வாழை இலை உணவு, மாவிலை, தென்னங்குருத்து தோரணங்கள், போன்றன இன்றைய பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்தும் உத்திகளாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும் அவற்றை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு தனிமனிதனின் அக்கரையான செயற்பாட்டில்தான் உள்ளது.

உலகின் ஒவ்வொரு உயிரும்  மனிதனின் உணவுத்தேவைக்காக அன்றி உலகின் சமநிலையைப் பேணுவதற்காகப் படைக்கப்பட்டுள்ளன என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்துமதம் இதன் அடிப்படையை தன்னகத்தே கொண்டு சைவ உணவு மற்றும் உயிர்கள்மீது இறக்கம் கொள்வது போன்ற பண்புகளை வலியுறுத்துகின்றது. 

இப்படியான ஒரு சிறந்த வாழ்வியலைக் கொண்ட நாம் இதனைப் பின்பற்றி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலம் பூமியின் நீண்டகால நிலவுகைக்கு உதவலாம் என்பதில் சந்தேகமில்லை.