You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பிள்ளையார் சுழியின் தத்துவம் என்ன தெரியுமா?

2019-07-11


ஒவ்வொரு இந்துவும் தாம் ஏதாவாது செயலை தொடங்கும் முன்பாக அல்லது  எழுதும் முன்பாக நாம் ‘உ’ என பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவார்கள். சில பெறியோர் இதன் தத்துவத்தை அறிந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களை பின்தொடர்ந்து பலரும் காரணம் புறியாமலே பிள்ளையார் சுழியினை பயன் படுத்துகின்றனர். 


இது வரை உங்களுக்கு பிள்ளையார் சுழியின்  தத்துவம் தெரியாவிட்டால் இப்போது  அறிந்து கொள்ளலாம்.
‘உ’ என போடப்படுவது  பிள்ளையார் சுழி.  ‘ஓம்’ என்ற மந்திரத்திற்கு பிறகே ‘கணேசாய நமஹ’, ‘நாராயணாய நமஹ’, ‘சிவாய நம’ என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ‘ஓம்’ என்பதை, ‘அ, உ, ம்’ என்று பிரிக்க வேண்டும். 

அதாவது, ‘அ, உ, ம்’ என்ற எழுத்துக்களை இணைத்தால் ‘ஓம்’ என்று வரும். 
‘அ’ என்பது படைப்பதையும், 
‘உ’ என்பது காப்பதையும், 
‘ம்’ என்பது அழிப்பதையும் குறிக்கும். 


இதனை மற்றொரு வடிவில் நோக்கினால் ‘அ’ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது.  ‘உ’ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக்கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நடக்கும் என்பதை உணர்த்தி நிற்கின்றது.


மேலும், ‘உ’ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால், நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காக ‘உ’ என எழுதுகிறோம்.