You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




திரௌபதி கிருஷ்ணரின் கையில் கட்டிய புடவை துண்டே இன்று ரக்ஷாபந்தன் விழா!

2019-07-13



கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பல்வேறு பண்டிகைகளுக்கும் பிரபலமான இந்தியா நாட்டில் பருவங்கள், மனித பிணைப்புகள், பயிர்களின் அறுவடை, தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் மகிமை போன்றவற்றுடன் தொடர்புடைய திருவிழாக்கள்  பல கொண்டாடப்படுகின்றன. அதில் சகோதரனுக்கும்  சகோதரிக்கும் இடையிலான அன்பை வெளிபடுத்தும் ராக்ஷாபந்தன் என்ற விழா மிக புகழ் வாய்ந்தது எனலாம், ராக்ஷாபந்தன் என்பது பாதுகாப்புப் பத்திரம் என்று பொருள்படும், இது சகோதர சகோதரிகளின் நிபந்தனையற்ற அன்பைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ராக்கி பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது,  ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆங்கில நாற்காட்டியின்படி ஆகஸ் மாதம் 13 ஆம் அந்த சிறப்பான நாள்  கொண்டாடப்பட உள்ளது. 

இது சாதி, மதம், மாநிலம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கொண்டாடப்படும் ஒரு மதச்சார்பற்ற திருவிழா ஆகும். இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் மொரீஷியஸிலும் பிரபலமாக  கொண்டாடப்படுகின்றது. பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதம் சார்ந்ததாக இருந்த போதும்  இன்றை சமூகத்தில் ஏற்படும் பல கசப்பான நிகழ்வுகளை குறைக்கவல்ல சமுதாயப் பண்டிகை என்றும்  கூறலாம்.


இந்த பண்டிகையின் தோற்றம் பற்றி அராய்ந்தால் அது மகாபார கதையை மைமாக கொண்ட ஒரு சகோதரபாசத்தை வெளிப்படுத்துகின்றது. 


மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.