You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நீங்கள் ஒக்­டோபர் மாதத்தில் பிறந்­த­வரா...?

2019-10-06


பிறந்த மாத­மா­னது ஒரு­வரின் குணா­தி­ச­யங்­க­ளையும், நடத்­தை­யையும் தீர்­மா­னிக்கும் என்­பது பர­வ­லான நம்­பிக்­கை­யாகும். இது உண்­மைதான், ஏனெனில் ஒரு­வரின் பிறந்த மாதம் அவர்­களின் தனி மனித ஆளுமை மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். ஒக்­டோபர் மாதத்தில் பிறந்­த­வர்­க­ளுக்கு என்று சில தனித்­து­வ­மான குணங்கள் இருக்­கி­றது.


         வசீ­க­ர­மா­ன­வர்கள் 
ஒக்­டோபர் மாதத்தில் பிறந்­த­வர்கள் வசீ­க­ர­மா­ன­வர்கள், மேலும் அனை­வரின் இத­யங்­க­ளையும் அவர்­களின் அழ­கான அணு­கு­மு­றையால் வெல்லும் திறனை அவர்கள் கொண்­டுள்­ளனர். மற்­ற­வர்­க­ளி­டையே மிகவும் பிர­ப­ல­மாக இருப்­பார்கள், மேலும் அனை­வரும் தங்கள் நண்­ப­ராக இருக்க வேண்டும் என்று விரும்­பு­வார்கள்.  இவர்கள் மிகவும் ஆற்றல் மிக்­க­வர்கள், 


       காதலில் சிறந்­த­வர்கள் 
யாரை­யா­வது அல்­லது எதை­யா­வது விரும்­பினால் அவர்­க­ளுக்கு அது எவ்­வ­ளவு முக்­கியம் என்­பதை நிரூ­பிக்க எந்த எல்­லைக்கும் செல்­வார்கள். எனவே அவர்­களின் அன்பின் மீது எப்­பொ­ழுதும் சந்­தேகப்படா­தீர்கள். இவர்­களின் இனி­மை­யான குணத்­தாலும், அணு­கு­மு­றை­யாலும் இவர்­களின் மீது பலரும் காதலில் விழு­வார்கள். ஆனால் இவர்கள் மீது ஒரு­முறை நீங்கள் காதலில் விழுந்­து­விட்டால் அதை நினைத்து நீங்கள் பயப்­பட வேண்­டிய அவ­சி­ய­மி­ருக்­காது.


நிலை­யான உணர்ச்சிக் கொண்­ட­வர்கள் 
இந்த மாதத்தில் பிறந்­த­வர்கள் மிகவும் உணர்ச்­சி­வ­சப்­படக் கூடி­ய­வர்கள், ஆனால் அதனை எப்­படி தனக்­குள்­ளேயே வைத்­துக்­கொள்ள வேண்டும் என்று இவர்கள் நன்கு அறி­வார்கள். தங்­களின்   கோபத்­தையோ, கவ­லை­க­ளையோ இவர்கள் மற்­ற­வர்­க­ளிடம் காட்ட மாட்­டார்கள். வாக்­கு­வா­தத்தில் ஈடு­ப­டு­வ­தையோ, தேவை­யில்­லாத சச்­ச­ர­வு­களில் ஈடு­ப­டு­வ­தையோ இவர்கள் விரும்­ப­மாட்­டார்கள். இவர்கள் ஒரு­போதும் மற்­ற­வர்­களை எடை­போட மாட்­டார்கள். நீங்கள் சாய்­வ­தற்கு எப்­போதும் தோள்­களை தயா­ராக வைத்­தி­ருப்­பார்கள்.
        அமை­தி­யா­ன­வர்கள் 
இவர்­களின் அமைதி இவர்­க­ளு­டைய தனிப்­பட்ட குணங்­களில் ஒன்­றாகும். இவர்கள் கோபப்­ப­டு­வதை பார்ப்­பது என்­பது மிகவும் அரி­தான ஒன்­றாகும், அப்­படி அவர்கள் கோபப்­பட்டால் அவர்­களால் தாங்­கிக்­கொள்ள முடி­யாத அள­விற்கு நீங்கள் பெரிய தப்பை செய்­தி­ருக்க வேண்டும். இவர்­க­ளுக்கு எப்­போதும் எதி­ரி­களை விட நண்­பர்­களே அதிகம் இருப்­பார்கள். அனை­வ­ரி­டமும் இருக்கும் நல்ல குணத்­தை தான் இவர்கள் முதலில் பார்ப்­பார்கள்.


       இலட்­சி­ய­மிக்­க­வர்கள் 
 ஏதா­வது ஒன்றை செய்ய நினைக்கும் போது, அவர்கள் தங்கள் இலக்­கு­களை அடையும் வரை தொடர்ந்து முயற்­சித்துக் கொண்டே இருப்­பார்கள். கடைசி நிமிடம் வரை காத்­தி­ருந்து எதையும் முடிக்க மாட்­டார்கள், குறித்த நேரத்­திற்கு முன்­னரே எதையும் செய்து விடு­வார்கள். கடி­ன­மா­ன­தாக இருந்­தாலும் ஒரு­போதும் வேலையை முடிக்­காமல் பின்­வாங்க மாட்­டார்கள்.


        தீர்வு வழங்­கு­ப­வர்கள்
இவர்­க­ளிடம் அனைத்து கேள்­வி­க­ளுக்கும் ஒரு பதில் இருக்கும், அதே­ச­மயம் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் இவர்களிடம் தீர்வு இருக்கும். இவர்கள் கூறுவது பெரும்பாலும் சரியானதாகத்தான் இருக்கும். சூழ்நிலையை ஆராய்ந்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவுடன் இவர்கள் வருவார்கள். இவர்கள் பிரச்சினைகளை முடிக்கும் வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.


         பிடி­வா­தக்­கா­ரர்கள்
மற்ற அனை­வ­ரையும் விட இந்த மாதத்தில் பிறந்­த­வர்கள் மிகவும் பிடி­வாதக் ­கா­ரர்­க­ளாக இருப்­பார்கள். இவர்கள் ஒரு இலக்கை வைத்து விட்டால் அதி­லி­ருந்து இவர்­களை திசை திருப்­ப­ுவது மிகவும் கடி­ன­மாகும். இது ஒரு­வ­கையில் நல்­ல­தாக இருந்­தாலும் பல­வ­கையில் இவர்­க­ளுக்கே பிரச்­சி­னை­யாக முடியும். இவர்கள் தங்­க­ளுக்­குள்­ளேயே போட்டி போட்டுக் கொள்­­வார்கள். இந்த பிடி­வா­தத்தால் இவர்கள் உட­னி­ருப்­ப­வர்­களும் பாதிக்­கப்­ப­டலாம்.
      ஆதிக்கம் செலுத்­து­வது
இவர்கள் மற்­ற­வர்கள் மீது அக்­க­றை­யாக இருந்­தாலும் அவர்­களை தங்கள் கட்­டுப்­பாட்டில் வைத்­துக்­கொள்ள விரும்­பு­கி­றார்கள். இது அவர்­களின் தலைமைப் பண்­புக்­கான அடை­யாளமாகும், இதன்­மூலம் இவர்கள் மற்­ற­வர்­களை தங்கள் எண்­ணங்­க­ளுக்கு போல செயல்­பட வைப்­பார்கள்.


             சந்­தேகம்
இவர்­களின் நம்­பிக்­கையை பெறு­வது என்­பது மிகவும் கடி­ன­மானதொன்­றாகும். இவர்­களின் சந்­தேக குணம் பல­ரையும் காயப்­ப­டுத்தும், மேலும் இது இவர்­களின் நெருங்­கிய நண்­பர்­க­ளிடம் கூட தவ­றான புரி­தலை ஏற்­ப­டுத்தும். இவர்­க­ளுக்குள் இருக்கும் இரகசியங்களையும், எண்ணங்களையும் ஒருபோதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.