You are here : life style

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குரு பகவான் தோஷங்கள் போக்கும் தளமாக திருச்செந்தூர் முருகன் அமைவதன் இரகசியம் இது தான்!

2019-11-03


முருகப் பெருமான் சுப்பிரமணி  சுவாமியாக அருள்பாலிக்கும் திருச்செந்தூர் முருகன்  “ஞான குரு”வாககும்  வழிபடப்படுகின்றார். இதனால் இவ் ஆலயம் குரு பகவான் தொடர்பான பரிகாரங்கள் செய்வதற்கு ஏற்ற தலமாக கூறப்படுகின்றது.


குரு விற்கான பரிகாம் செய்வதற்கு காரணமாக ஒரு புராண கதை கூறப்படுகின்றது. 


பல அதீதி சக்திகளைப் பெற்ற சூரன் மண்ணுலகத்தினருக்கு, விண்ணுலகத்தினருக்கும் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வந்தான். இதனால் சூரன் மீது கோபம் கொண்ட  முருகப் பெருமான் போர் செய்த ஆயத்தமான இடம் திருச்செந்தூர்.

 


போருக்குச் செல்லும் முன் அசுரர்களைப் பற்றிய வரலாற்றை குரு பகவான் முருகனிடம் விளக்கினார். இவ் நிகழ்வு நடந்த தலமாக திருச்செந்தூர் விளங்குகின்றது.

 

அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தன், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம் என்று கூறினார். யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும் என்றும் கூறிச் சென்றார்.


குருவின் விளக்கத்தால் முருகப் பெருமான் சூரகளிடம் போரிட்டு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து அவர்களை தமது பக்தர்களாக ஆட்கொண்டார்.


அதோடு அவர்களை சேவல் மற்றும் மயிலாக மாற்றி தன்னுடனே இருக்க அருள் புரிந்தார்.

பகைவருக்கும்  கருணைகாட்டும்  முருகப்பெருமானை வணங்கி நாமும் நன்மை அடையலாம். 


திருச்செந்தூர் பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார்.


அவருக்கு பின்னர் இருக்கும் கல்லால் மரத்தில் கிளி வடிவில் வேதங்கள் உள்ளன.

குருவின் உதவியுடன் முருகன் சூரனை வென்றார். இதன் காரணமாக திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குரு பகவானால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் நீங்கி நன்மை கிடைக்கும் என நம்பப்படுகின்றது.