You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




28 வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிங்களா? அதிர்ச்சி தகவல்!! இதை கண்டிப்பா படிங்க

February 13 , 2018


பெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் நிறைய எழுந்தன. ஆனால் ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

வயதாக வயதாக பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் குறைகிறது.

ஒரு ஆராய்ச்சியில் 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கால தாமதமாக தான் கருவுறுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

ஆனால் 25 வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் கர்ப்பமடைந்துவிடுகிறார்களாம். இது பற்றி சில உண்மைகளை இந்த பகுதியில் காணலாம்.

டெஸ்ரோன் அளவுகள் ஆண் தனது 28 வயதிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1% டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி விந்தணுக்களின் உற்பத்தியும் முப்பது வயதிற்கு மேல் குறைகிறது.

வாழ்க்கை முறை ஆண் கருவுறுதல் வயதை பொருத்து அமைந்தாலும், அது வாழ்க்கை முறையை பொருத்தும் அமையும். புகைப்பிடித்தல், ஊட்டச்சத்தின்மை, இறுக்கமான உடைகளை அணிவது, தூக்கமின்மை போன்ற சில பிரச்சனைகளும் ஆண்கள் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது.

எது சரியான வயது? அப்படி என்றால், ஆண்கள் தந்தையாக எது தான் சரியான வயது என கேட்கிறீர்கள் சரிதானே? 22 வயது முதல் 25 வயது வரை இருக்கும் காலம் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான காலமாகும். ஆனால் இந்த வயதில் ஆண்கள் வாழ்க்கையில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள்.

எனவே 28 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியானதாக இருக்கும். ஆனால் 30 வயதில் உங்களது விந்தணுக்களின் இயக்கம் குறைய ஆரம்பித்துவிடும்.

டின்ஏ பாதிப்பு ஆண்கள் 28 வயதிற்கு மேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கருவுறும் திறனை 1% இழக்கிறார்கள் என பார்த்திருந்தோம்.

அதுமட்டுமின்றி ஆண்களின் 35-ஆவது வயதில் அவர்களின் டி.என்.ஏக்கள் பாதிப்படைய தொடங்குகிறது. இதனால் ஆண்கள் தங்களது 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுதல் அவசியம்.