You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




"வாழ்க வளமுடன்" எனும் வாழ்த்து தரும் வாழ்வு - ஆன்மீகமும் அறிவியலும்

2018-07-11


வாழ்க என்பது வாழ்த்துச் சொல், வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையை குறிக்கும். எம்மை எமது மூத்தோர் வாழ்க வளமுடன் என்று வாழ்த்த கேட்டிருப்போம் அல்லது பழைய திரைபடங்களில் இவ் வாழ்த்தை கேட்டிருப்போம். வாழ்க என்பது வாழ்த்துச் சொல், வளமுடன் என்பது  நிறைவுத் தன்மையை குறிக்கும். வாழ்க வளமுடன் என்று   ஒருவர் வாழ்த்தினால் நிறைவான வாழ்க்கை வாழ்க என்று வாழ்த்துவதாக பொருள். ஒருவரின் வாழ்க்கை  அவரின் தேவைகள் பூர்த்தி அடையும் போது நிறைவு தன்மையை அடைகின்றது.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கிமானவை. உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கி விடுகின்றது.

1.உடல் நலம்

2.நீண்ட ஆயுல்

3.நிறைந்த செல்வம்* 

4.உயர்புகழ்* 

5.மெய்ஞானம்.

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.

*"வாழ்க வளமுடன்" என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.*

அறிவியல்

இந்த வார்த்தையை வார்த்தை  ஜாலமாக மட்டும் நோக்காமல் அறிவியலின் ஊடாக நோக்கினால் இதன் உளவியலை புரிந்து கொள்ளமுடியும்.

"வாழ்க வளமுடன்" என்று உச்சரிக்கும் போது  உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல்பகுதியில் “ழ்” எனும் போது ஒரு அழுத்தம் நிகழ்வதை  உணர முடியும். உள் நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறி கண்ணுக்கும் நேர்கோட்டில் பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் சக்தி மையம் உள்ளது. இதனை  அறிவியலில் பீனியல் சுரப்பி எனவும் ஆன்மிகத்தில் துரியம் எனவும் அழைப்பார்கள். இவ் அழுத்தத்தின் மூலம் இவ் சக்தி தூண்டபட்டு நம் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் ஆற்றல் தூண்டப்படுகின்றது. 

உங்கள் எண்ணம் வலிமை மிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கும் வந்து விடும். கொஞ்சம் பலவீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் சிறிது சிரமபட்டு அடைய நேரிடும்.  எண்ணம் எப்போதுமே வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது வெகு சீக்கிரமாக அதை செயலாக மாற்றும்.

"வாழ்க வளமுடன்" என உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகளை பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம். 

"வாழ்க வளமுடன்" வெறும் வாழ்த்துச் சொல் அல்ல  அது ஒரு மந்திரச்சொல். நீங்களும் மற்றவறை இவ்வாறு வாழ்திப் பழகினால் உங்கள் வாழ்வும் சிறக்கும்.

வாழ்க வளமுடன்