You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உதவும் சங்கிலியில் உங்கள் கரங்களும் இணைந்துள்ளதா?

2018-07-25ஒரு நெடுஞ்சாலை ஓரமாக ஒருபெண், தனது பழுதான காரின் சக்கரத்தை மாற்ற முடியாமல் வழியில் செல்வோரிடம் உதவி கேட்டு


ஒரு நெடுஞ்சாலை ஓரமாக ஒருபெண், தனது பழுதான காரின் சக்கரத்தை மாற்ற முடியாமல் வழியில் செல்வோரிடம் உதவி கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச்சென்ற ஒருவர், அந்தப்பெண்ணுக்கு உதவினார்.
இவர் புகழ்பெற்ற ஸ்கேட்போர்ட் விளையாட்டு வீரர் பிரெய்ன் ஆன்டர்சன். பார்ப்பவர்களுக்கு இவர் அழுக்காக தெரிந்தாலும். அவரது மனம் அனைவரையும் விட தூய்மையாக இருந்தது. அந்த பெண்னின் கார் சக்கரத்தை சிறிது நேரத்தில் மாற்றி கொடுத்தார் அவர். 
“உங்களுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்?”என, அந்தப் பெண் கேட்டார். எவ்வளவு கேட்டாலும், அந்தப் பெண் கொடுக்கத்தயாராகவே இருந்தார்.
ஆயினும், அந்த மனிதர், ஒரு புன்னகையோடு, “நான் மெக்கானிக் இல்லை அம்மா. இது ஓர் உதவிதான். அதனால், எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் பத்திரமாக செல்லுங்கள் என்றார்*
இல்லை ஐயா நீங்கள் இந்த நடுவழியில் உதவி செய்யவில்லையென்றால் என் கதி என்னவாகியிருக்கும், அதனால், எவ்வளவு வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்; கொடுக்கிறேன்” என்று அந்தப்பெண் சொன்னார்.


அதற்கு அவர், “அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள், அம்மா. என் பெயர் பிரெய்ன் ஆண்டர்சன். அடுத்த முறை உதவி தேவைப்படும் யாரையாவது நீங்கள் பார்த்தீர்கள் என்றால் அப்போ எனக்குக்கொடுக்க நினைக்கும் தொகையை என்னை மனதில்  நினைத்துக்கொண்டு அவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அது போதும்!” என்று கூறி  தனது வழியில் சென்றார் பிரெய்ன்.
சில மைல் தூரம் போனதும், ஒரு சிறிய உணவகத்தில் காரை நிறுத்தி உணவருந்தச்சென்றார் அந்தப்பெண். அங்கு, ஒரு கர்ப்பிணியாக பணிப்பெண்  கனிவான முகத்துடனும் சுறுசுறுப்பாகவு உணவு பரிமாறினார். சாப்பிட்டு முடிந்ததும், அவர் அந்த பெண்ணிடம் நூறு  டாலர் கொடுத்தார். அதைக்கொடுக்கும்போது பிரெய்ன் ஆண்டர்சனை நினைத்துக்கொண்டார்.


அந்தப் பணிப்பெண், மிகுதி பணத்தை வாங்கிக்கொண்டு வருவதற்முன், அந்தப்பெண் உணவகத்தில் இருந்து வெளியேறிச்சென்றார்.
மீதி பணத்துடன் வந்த கர்பிணி பெண் அந்த மேசையில் கைதுடைக்கும் துணிக்குக்கீழே, இன்னும் 400 டாலர் பணம்மும் கூடவே, ஒருசிரு கடிதமும் இருப்பதை கண்டார் .

அதில்,
‘மை டியர்! இந்தப்பணம் உனக்குத்தான். இந்தச்சமயத்தில் உனக்கு இது தேவைப்படலாம். மற்றபடி, நீ எனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை. ஒரு நெருக்கடியில், முகம் தெரியாத ஒருத்தர் எனக்கு உதவி செய்தார். அதன் தொடர்ச்சியாக, இப்போது உனக்கு நான் செய்திருக்கிறேன். ஒருவேளை, எனக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், இந்த அன்புச்சங்கிலி அறுந்துவிடாமல், உதவி தேவைப்படும் வேறு ஒருவருக்கு உன்னால் முடிந்த உதவியைச்செய்" என்று எழுதி வைத்திருந்தார் அவர்.


தக்கநேரத்தில், யாருக்கோ நாம் செய்த உதவி, நமக்கு உதவி தேவைப்படும்போது, வேறு யாரோ ஒருவர் வழியாக கிடைப்பதை நீங்கள் அனுபவித்திருக்கலாம். உதவும்கரங்கலின் சங்கிலி அறுந்துவிடாமல் இருக்க நாமும் கரம் கோர்ப்போம்.