You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாம் நினைப்பதெல்லாம் நடந்தால்?

2018-07-30


ஒருவனுக்கு மிகவும் கவலை வாழ்க்கை இப்படி இருக்கிறதே! நாம் நினைப்பதெல்லாம் நடந்தால் என்ன என்று எண்ணினான். தனக்குத் தெரிந்த குருவைப் பார்க்கச் சென்றான்.


அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டு., அவரை மேலும் கீழுமாக பார்த்தவாறு நின்றான். 


குரு “ஏதோ எதிர்பார்ப்புடன் வந்திருக்கிறாய் போல” என்று அவனைப் பார்த்து கேட்டார்.” 


அவன் மௌனமாக ஆமாம் குருவே! நான் நினைப்பதெல்லாம் நடக்கவேண்டும். இதற்கு என்ன வழி..? என்று குருவிடம் தன் ஆசையை தெரிவித்தான். 


குரு புன்முறுவலாக சிரித்துக்கொண்டே., 
அவனை அருகில் அழைத்தார். உன் நிலை எனக்கு புரிகின்றது. உன்னை போன்றுதான் பலரும் விரும்புகின்றனர். நான் ஒரு கதை சொல்கிறேன் பொறுமையாகக் கேள் என்று கதையை கூற ஆரம்பித்தார். 


ஒரு நாள் ஒரு இளவரசன் காட்டுக்கு தனியாக வேட்டையாடச் சென்றான். அவன் காட்டுக்குள் வெகு தூரம் சென்றதனால் அவனுக்குக் களைப்பும், பசியும்., தாகமும் ஏற்பட்டது. கூடவே பயமும் அவனை ஆட்கொண்டது. 


சோர்ந்து போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தான் . அது ஒரு கற்பக மரம் என இளவரசனுக்குத் தெரியாது. 


அதிக தாகமாக இருக்கிறதே. கொஞ்சம் தண்ணி கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். சற்றே திரும்பி பார்த்தால், அந்த மரத்தடியில் ஒரு சிறு குழி, அதில்  தண்ணீர் பொங்கி வந்து கொண்டு இருந்தது. தாகம் தீர குடித்தான். 


சற்று நேரத்தில் பசி வந்தது. ஏதாவது சாப்பிட கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், அந்த மரத்தில் இருந்து சுவையான சில பழங்கள் விழுந்தன. அவனுக்கிருந்த பசியிலும்., களைப்பிலும் என்ன ஏது என்று நினைக்க நேரமில்லை. அந்தப் பழங்களை உண்டு பசி ஆறினான். 


களைப்பு, உண்ட மயக்கம், தூக்கம் கண்ணை சொக்கி கொண்டு வந்தது. அடடா இப்ப பஞ்சு மெத்தையுடன் ஒரு கட்டில் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான், உடனே ஒரு கட்டில் வந்தது. 
ஏறி படுத்தான். காலெல்லாம் வலிக்கிறது. பிடித்து விட ஒரு அழகான இளம் பெண் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான். ஒரு பெண் தோன்றி அவன் காலை மெல்ல வருடி விட்டாள். 
அசந்து தூங்கினான். திடீரென்று விழிப்பு வந்து விழித்துக் கொண்டான். 


என்ன இது, நாம் நினைப்பதெல்லாம் நடக்கிறதே., ஒரு வேளை இது ஏதாவது பிசாசுடைய வேலையா இருக்குமோ! அந்தப் பிசாசு இங்க வந்து விட்டால்..? என்று நினைத்தான். உடனே ஒரு பெரிய பிசாசு வந்தது. கற்பக மரம் தான் நினைப்பது எல்லாம் கொடுக்குமே. 
ஐயோ, இந்த பிசாசு நம்மைக் கடித்து தின்று விடுமோ..? என்று நினைத்தான், அவன் நினைத்த மாதிரியே அவனை கடித்து தின்று விட்டது. 


இப்படி நினைப்பது எல்லாம் நடந்து விட்டால் நாம் பிசாசின் வாயில் தான் போய் விழுவோம் என்று கூறி முடித்தார் குரு. 
நாம் விரும்பி அடையும் அனைத்தும் காலப்போக்கில் எமக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன, கடவுளுக்குத் தெரியாதா நமக்கு என்ன வேண்டும் என்று எனவே விரும்பியது கிடைக்க வில்லை என மனமுடைவதை விட இறைவன் எமக்குத் தந்ததே சிறந்தது என எண்ணினால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.