You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கிருஷ்னர் மனதில் யார் உள்ளார் ?

2018-08-06


அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார்.
கண்ணாடி முன் நிற்பவரின் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார். அப்படியான சிறப்பு கொண்டது அந்த கண்ணாடி.
உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள்.

 
திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.


அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள்.

அந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு வந்தார். 
அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.


அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல,
போடா! அவர் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போல, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல,


ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.
எல்லாரும் ஆர்வமாயினர். கிருஷ்ணனின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர்.

என்ன ஆச்சரியம்!
யாருக்கு பகவானை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கிருஷ்ணரைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.

கோவிந்தரே! 
மாயம் செய்கிறீரா?
என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி.
என்னையார் ஒருவர் எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்று உரைத்தார் கருணையுள்ள கோவிந்தன்.
நாமும் நினைப்போம் எந்நேரமும் இறைவனை அவர் மனதில் எமக்கும் ஒரு இடம் கிடைக்கும்மே!