You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இவையே உங்களின் வளங்கள்!

2018-08-07


எனக்கும் வாழ்வில் முன்னேற ஆசைதான் ஆனால் என்னிடம் பணம் இல்லையே, சரியான தொழில்இல்லையே, உதவுவார் யாரும் இல்லையே, நேரம் இல்லையே என உங்கள் மனம் புலம்புகின்றதா? 
உங்களிடம் இருக்கும் வளங்கள் கொண்டே முதலீடு இல்லாமல் கூட ஆயிரம் நல்ல தொழில்கள் தொடங்கிவிடலாம். 


பேசுவதை மட்டுமே தொழிலாக ஆரம்பித்து சாதித்து நின்றவர்கள் எத்தனையோ பேர் அவர்களால் மட்டும்எவ்வாறு முடிகின்றது. நீங்கள் சிந்தித்ததுண்டா? 


உங்களிடம் இருக்கும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், பார்க்கும் இரண்டு கண்கள், கேட்கும் காதுகள், மூளை, எதையும் சாதிக்க கூடிய மனம் , கற்பனை வளம் இவையே உங்களின் வளங்கள். 
இவை தான் அணுஆயதங்களை விடவும் சக்தி வாய்ந்தவை என நீங்கள் அறிவீர்களா? 


உங்களிடம் இருக்கும் அறிவையும், கற்பனை வளத்தையும் வருமானமாக, லாபமாக மாற்றுங்கள். முதலீடுஇல்லாமல் கூட ஆயிரம் நல்ல தொழில்கள் தொடங்கி விடலாம். ஆனால் திறமையும், நம்பிக்கையும்மற்றும் ஈடுபாடு இல்லாமல் ஒரு தொழிலை கூட நடத்த முடியாது. 


இப்போதே முடிவெடுங்கள் உங்களுக்கு எது தெரியுமோ எதனைப்பற்றிய அறிவு உங்களிடம் அதிகமாகஉள்ளதோ இதனை மூலதனமாக்குங்கள் அதற்குத் திறமையும், நம்பிக்கையும் மற்றும் ஈடுபாட்டையும்கொண்டு உறமூட்டுங்கள் வெற்றியின் கதவுகள் தனாக திறந்து கொள்ளும். 


வாழ்க வளமுடன்