You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கடவுளின் கணக்கு - சற்று சிக்கலானது

2018-08-08


நாம் எத்தனை தர்மங்கள் செய்தாலும் இறைவன் எம்மை கண்டு கொள்வதில்லையே என நம்மில் பலருக்குகவலை ஏற்படுவதுண்டு. கடவுள் எம்மிடம் பாரபட்சமாய் நடந்துகொள்கின்றாரே என்ற வருத்தம் ஏற்படும். 


ஆனால் இறைவனின் கணக்கு என்றும் தவறுவதில்லை அவன் பார்வையில் அனைவரும் ஆன்மாவேஅவரவர் செயலுக்கு ஏற்றப் பலனை சரியாகக் கணக்கிட்டு தருகின்றார் இறைவன் இதனை விளக்கச்சிறிய கதை ஒன்று உள்ளது. 


ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். 
மூவருக்கும் பசி ஏற்பட்டது, முன்னவர் இருவரிடமும் ஐந்து, மூன்று ரொட்டிகள் இருந்தன. 


எனவே இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும் என மூவரும் ஆலோசித்தனர். அப்போது மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். நீங்கள் உங்கள் ரொட்டிகள்ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகள் ஆக்குங்கள். இப்போது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்றுஅப்படியே செய்தனர். 


ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். 


மறுநாள் விடிந்ததும் மூன்றாவதாய் வந்தவர் இருவருக்கும் நன்றி தெரிவித்து எட்டு தங்க நாணயங்களைக்கொடுத்து நீங்கள் உங்களுக்குள் இதை பிரித்து கொள்ளுங்கள் என கூறி விடை பெற்றார். 
மூன்று ரொட்டிகளை கொடுத்தவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய்எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்குச் சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்தஉனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.


மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்நான் பங்கிட சம்மதித்தேன். 
நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்டதக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார். 


இருவரும் முடிவுக்கு வரமுடியாததால் அரசனின் சபைக்கு சென்றனர். அரசனுக்கு ஒரே குழப்பமாகஇருந்தது எனவே நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இறைவனிடம்முறையிட்டு விட்டு  தூங்கினார்.  கனவில் கடவுள் காட்சி அளித்து தனது தீர்பை மன்னருக்கு உறைத்தார்மன்னர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். 
அடுத்த நாள் மன்னன் இருவரையும் அழைத்தான்.  


மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும்கொடுத்தார். 
ஒரு காசு வழங்கப்பட்டவர் மன்னா! இது அநியாயம். என புலம்பினான் 
அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத் துண்டுகள்தான்  கிடைத்தது. ஆக நீ தருமம்செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார். 


ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும். 
இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்குஎன்பதே இறைவனின் கணக்கு 
எனவே இறைவனை குறை கூறுவதை விடுத்து உங்கள் மனதை திறந்து வைத்து உங்கள் செயல்களைநீங்களே கணக்கிடுங்கள்