You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மனதின் வலிமையே அனைத்தையும் தோற்கடிக்கும் ஆயுதம்

2018-08-08


அனுபவமே வாழ்க்கை ஆகிவிடா கூடாது, ஆனால் வாழ்க்கை ஒரு அனுபவமாகலாம். எல்லாமே அனுபவத்தின் அடிப்படையில் அல்ல பள்ளம் என்று தெரிகிறது விழுந்தால் மரணம் என்பதும் புரிகிறது.விழுந்து பார்த்து அனுபவம் ஆக்கி கொள்வோம் என்று நினைப்பது எதை குறிக்கிறது உனது அறியாமையை அப்படி தானே.
தவறு என்று தெரிந்த பின்னும் அதை செய்து அனுபவமாக எடுத்து கொள்வது மரணத்திற்கு பின் தெளிவு என்ற அனுபவத்தால் யாருக்கு என்ன பயன்.


மனம் கஷ்டம் என்ற நிலை வரும் போது தான் மனிதன் இறைவனை தேடுகிறான்.எங்கும் நிறைந்த கடவுளை ,தேடுவது தேவையற்றதே பிரபஞ்சத்தின் எல்லா படைப்புகளிலும் இறைவன் கலந்து இருக்கிறான்.அதை தேடி அலைய தேவையே இல்லை, நாம் பிரபஞ்ச நேசத்தை வளர்க்க வளர்க்க கடவுள் நம் முன் நம்பிக்கை என்ற தன்னம்பிக்கையாக பலமாக உருவெடுக்கிறார்.உயிர் என்ற உன்னத சக்திக்கு பாரபட்சம் இருக்க கிடையாது. அது போல கடவுளுக்கும் நல்லவன் கெட்டவன் என்ற பிரிவினை கிடையாது. நாம் மனம் என்ற சக்தி நிலையில் எதை எண்ணுகின்றோமோ அது அதுவாகவே நடந்தேறும். 


தெய்வ குற்றம், பில்லி சூனியம், போன்ற பல சக்தி நிலைகள் இப்பிரபஞ்சத்தில் வலம் வந்தாலும் உங்கள் மன வலிமை குன்றி போகும் நேரத்தில் மட்டுமே இவைகளால் உங்களை ஆள முடியுமே தவிர மனதை நேர்மறையான எண்ணம் கொண்டு பலம் பொருந்திய சூழலை வைத்து கொண்டால் எதுவுமே நம்மை அண்ட முடியாது.ஏன் தோல்வி என்ற பயமே அற்று போய் விடும்.


உனது உடல் ஆரோக்கியம், தொழில் ஆரோக்கியம், குடும்ப ஆரோக்கியம் அனைத்துமே மனம் என்ற ஒற்றை சொல்லுக்கு கட்டுபட்டவை. 


மனதை நல்ல விதமாக வைத்து கொண்டால் எல்லாமே நல்ல விதமாக அமையும்.