Kalaikesari
You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் நான்கு மனைவியில் உடன் வரப்போகும் மனைவி யார்? வாழ்வை புரிந்து கொள்ளுங்கள்.

2018-08-09


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக 

அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின்அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு 

தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். 


அவன் தனது இரண்டாவது மனைவியை உதவி தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டான். பிரச்சினைகள் 

வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில்உதவினாள். 


தனது மூன்றாவது மனைவிமீது ஆசைகொண்டு பாதுகாத்தான் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால்காட்டிக்கொள்ள

 பயந்தான். பிறர் அவளை அபகரித்துவிடுவார்கள் என பயந்தான். 


ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை  நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீதுமிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் 

கவனித்து கொண்டாள். 
ஒருநாள்.


அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின்தன்னுடன் 

ஒரு மனைவியையாவது கூட்டிச்செல்ல விரும்பினான். 


எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பி தான் அதிகம் நேசித்தநான்காவது 

மனைவியை அழைத்தான். 


அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியைஅழைத்தான். 
அவளோ நீயோ சாகப்போகிறாய், நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டுசென்றுவிட்டாள். பிறகு தனது 

இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். 


அவளும் மன்னித்து விடு என்னால் உன் கல்லறைவரைக்கும் தான் வரமுடியும். கடைசி வரை உன்னுடன்வரமுடியாது என்று மறுத்துவிட்டாள். 
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல்ஒலித்தது. 


நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். 
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும்தருவாயில் இருந்தாள். 

காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன்வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் 

சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான். 


உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு. 
1. நான்காவது மனைவி நமது உடம்பு. 
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன்வரப்போவதில்லை. 
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது. 
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். 
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது. 
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். 
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். 
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை. 
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. 
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன்இறுதி வரை 

கூட வரப்போவது நமது ஆன்மாதான். 
ஆன்மா உலக வாழ்வின் விடுதலையை எமக்கு தரவல்லது. அதனை வாழும் காலத்தில் நாம் சரியாகவழிநடத்த 

தவருவதால் தீமையின் பால் நமது மனம் செல்கின்றது. மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பம்அனுபவிக்கும் நிலை எமக்கு ஏற்படுகின்றது.