You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்முகம் காட்டுங்கள் - தேவையில்லாதவர்கள் என்று ஒருவரும் இல்லை

2018-08-14


ஒரு நபர் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார் . ஒரு நாள் இறைச்சி பதப்படுத்தும் குளிர் நிலை அறையில் சிக்கிக் கொண்டார். அந்த அறையின் தானியங்கி கதவுகள் வேலை நேரம் முடியும் போது தானாக மூடிக் கொள்ளும். 
நிலைமை அறிந்த நபர் பதட்டம் அடைந்தார். தொடர்ந்து அரைமணித்தியாலம் இவ் அறையில் இருந்தால் மனிதன் உறை நிலைக்குச்சென்று இறந்து விடுவது நிச்சயம். 


அனைவரும் பணி முடிந்து வெளியோ சென்றிருந்தனர் . அவர் எவ்வளவு தான் கத்தினாலும் அவர் குரல் அந்த அறையை தாண்டி வெளியில் ஒளிக்க வில்லை. 
அவர் நம்பிக்கை இழந்தார் இறை வனை தியானித்தப்படி கண்களை மூடிக்கொண்டார். சிறிது நேரத்தில் யாரோ அறைக் கதவை திறக்கும் சத்தம் கேட்டது. 


இறைவனுக்கு நன்றி கூறியபடி கண்களைத் திறந்தார் அவர், அங்கே தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தான். சந்தோஷத்தில் அவனை கட்டி தழுவிக்கொண்டார். 
அவனிடம் "நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?" என்று கேட்டார். 


அதற்கு அவன் நீங்கள் காலையும் மாலையும் எனக்கு வணக்கம் தெரிவிக்காமல் பணிமுடிந்து சென்றதில்லை ஆனால் இன்று காலை வணக்கம் தெரிவித்தீர்கள் மாலை உங்கள் புன்னகை முகத்தை எதிர்பார்த்திருந்தேன் உங்களை காணவில்லை உங்கள் குரலும் என் காதில் விழவில்லை. உடனே சந்தேகம் வந்தது தொழிற்சாலையின் ஒவ்வொரு இடமாக தேடினேன்...அப்போதுதான் உங்களை கண்டு பிடித்தேன் ..." என்றான். 


நாம் நமது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் நமது வாழ்க்கையில் சம்பந்தம் உடையவர்களே யாரையும் நாம் தேவையில்லாதவர்கள் என்று ஒதுக்கி விடக்கூடாது. அவர்களின் உதவி எந்த சந்தர்ப்பத்திலாவது ஈடு செய்யமுடியாததாக இருக்கலாம். எனவே அனைவரிடமும் இன்முகம் காட்டுங்கள்.