You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முன்வினை பாவங்கள் நீக்கும் அஜா ஏகாதசி - அரிச்சந்திரனின், வாழ்வை மீட்டு தந்த விரதம்

2018-08-20


ஏகாதசி தினமானது மஹா விஷ்னுவை வழிபாட சிறந்த விரத நாளாகும். இன்றைய தினத்தில் கண்விழித்து உபவாசம் இருந்து விரதம் கடைபிடித்தால் விஷ்னு பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று கர்மவினைகளிலிருந்து விடுபட்டு நீங்காப் புகழுடன் வாழ்வோம் என பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.


அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள் உள்ளன இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. இதில்  நாளைய தினம் அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். 


அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில்  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.


சத்தியம் தவறாத அரிச்சந்திரன் பற்றி நாம் அறிவோம் அவர் சத்தியத்தினை காப்பதற்காக நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும்  நிலைக்கு தள்ளப்பட்டார். முலும் இவர்   நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர நேர்ந்தது இருந்தும் அவர் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.


ஒரு நாள் அவர்,  அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார். முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். 


அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி  நாளில் உபவாசமிருந்து  அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து வழிபட உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.


அதன் படி அரிச்சந்திரன், அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.


இந்நாளில் விரதம் இருப்பது மட்டுமன்றி எவரொருவர், விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் மாகாபாரதத்தில் கூறி உள்ளார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.