You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மரணம் நடந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு சுபகாரியம் கூடாது கரணம் அறிவீர்களா?

2018-08-22


ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகலம், கொண்டாட்டம் சுபகாரியம் செய்யக் கூடாது என்று சாஸ்திரம் அறிந்த பெறியவர்கள் கூறி உள்ளார்கள்.

 
அதையே இன்றுவரை நாமும் பின் பற்று கின்றோம். இதற்கான காரணம் என்னவெனில் இந்து மத சாஸ்திரங்களின் படி ஒருவர் இறந்ததன் பின்பு அருடைய ஆன்மா முதல் மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோரையும் தமது உறவுகளை பார்த்துக்கொண்டு நிற்கிது. 10ஆவது நாளில் இந்த ஆன்ம வாழ்ந்த வீட்டிற்குள் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது. 11ஆவது 12ஆவது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது.

 
13ஆவது நாள் யம கிங்கரங்கள் கயிற்றால் ஆன் மாவை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது. இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஆன்மா அதனுடைய கரும வினைகளுக்கு அமைய ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தையோ பிரம்மலோகத்தினையோ அடைகிறது. இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஆன்மாவுக்கு ஏற்படும் பசி தாகம் என்பவற்றை தனிப்பதற்காக மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். ஆகவே ஒருவர் இறந்த பின் முதல் ஒரு ஆண்டு காலம் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும். இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது. 


நம்முடைய ஒரு வருடக்காலப்பகுதி தேவர்களுக்கு ஒரு நாள் எனவே தான் நம்முடன் வாழ்ந்த உறவு முழுமையாக மோட்சம் அடையும் வரை கொண்டாட்டம் சுபகாரியங்களை விடுத்து அவருடைய ஆத்ம சாந்திக்காக பிராத்தித்தல் மற்றும் புண்ணிய காரியங்களைச் செய்யும் படி சாஸ்திரங்கள் கூறுகின்றன.