You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வாழ்க்கை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரும் இரண்டு செயல்கள்

2018-08-23


நமது மனம் நேர்மறை எண்ணங்களால் நிறைய வேண்டும் அப்போது தான் நம்மால் பிரபஞ்ச சக்தியை அடைய முடியும் இதனால் நிம்மதியும் செல்வமும் அமைதியும் வந்து சேறும்.


ஆனால் நேர்மறை எண்ணங்களை எவ்வாறு தோன்ற செய்வது என்பது தான் எமது பிரச்சினை, நாம நவாழும் சூழல் மிக அதிகமாக எதிர் மறை எண்ணங்களினால் நிறைந்து காணப்படுகின்றது. நாம் அவற்றையே சுற்றி வந்த கொண்டிருக்கின்றோம். இவற்றை கடந்து எமது மனதை நேர்மறை எண்ணங்களுக்குள் கொண்டு செல் ஒருபயிற்சி அவசியமாகின்றது.


நம்முடைய நிம்மதியான தூக்கமும், தியானமும் தான் நேர்மறை எண்ணங்களை எமது உள் மனதில் விதைக்கக்கூடிய இரண்டு வழிகள்.


தூக்கம் விழிப்புணர்வற்ற தியானம்.
தியானம் விழிப்புணர்வான தூக்கம்.


இந்த இரண்டிற்குமான அர்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.
நிம்மதியான தூக்கமும், மனதை ஒருநிலைப் படுத்தும் தியானமும் தான் நம்முள் பிரபஞ்ச சக்தியை அதிமாக்குகின்றன. நமது உடல் சோர்வாகும் பொழுது நமக்கு நம்மை அறியாமல் தானாகவே தூக்கம் வருகிறது அல்லவா? அது ஏன் என்று சிந்தித்து உள்ளீர்களா? உடலுக்குத் தேவையான பிரபஞ்ச சக்தி தூக்கத்தில் கிடைப்பதால் தான் தானாகவே தூக்கம் வருகிறது. அதனால் தான் உடல் சோர்வு தீர்ந்து நமது உடல் ஆரோக்கியம் ஆகிறது.


 இதனால் மனம் குழப்பங்களில் இருந்து விடுபட்டு தெளிவு அடைகின்றது. தெளிவான குளத்தில் தான் மீன் பிடிக்கலாம். அது போல் தெளிவான மன நிலை நல்ல எண்ணங்களை உருவாக்க அடித்தளமாகின்றது.


அந்த நேர் மறை சக்தியை அதிகமாக எடுக்கும் மற்றொறு முறை தான் தியானம். பிரபஞ்ச சக்தி அதிகமாகும் பொழுது வாழ்க்கை பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு பதில் கிடைக்கிறது.
காரணம் பிரபஞ்ச ஆற்றலால் நம் அறிவாற்றல் அதிகமாவதால் தான் நமக்கான சரியான பதிலினை கண்டறிய முடிகின்றது.