You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஆழ்மனம் எங்கே உள்ளது?

2018-08-29


நம்முடைய மூளை தான் நமக்கான மற்றும் நம் எண்ணங்களுக்கான வேர்.

ஏதேனும் ஒரு வார்த்தை அல்லது காட்சி நம் மூளைக்குள் சென்று பதிவானால் அது எண்ணமாக மாற்றம் அடைகிறது.

மாற்றம் பெற்ற எண்ணத்தை மனம் என்கிறோம்.

எண்ணங்களின் வலிமையைப் பொருத்து (அது செயல்படும் விதத்தைப் பொருத்து பிரிக்கப் பட்டதே) மனதை மூன்றாகப் பிரித்துள்ளோம்.

1. வெளிமனம்
நாம் ஒவ்வொரு நாளும் சாதாரணமாக பலவற்றை கடந்து செல்கிறோம் அவை நம் மூளையில் பதிவான உடன் மறைகிறது அதை வெளிமனம் என்கிறோம்.

2. நடுமனம்
சில வார்த்தைகள் அல்லது காட்சிகள் நம்முள் உணர்வை ஏற்படுத்தும் போது அவை சில நாட்கள் வரை நம் மூளையில் பதிவாகிறது அதை நடுமனம் என்கிறோம்.

3. நம்முள் தீவிரமான உணர்வை ஏற்படுத்தும் வார்த்தை அல்லது காட்சிகள் நம் மூளையில் அழியாத அளவிற்கு ஆழமாகப் பதிகிறது அதையே ஆழ்மனம் என்கிறோம்.

ஆழ்மனதில் பதிவானால் அது நிச்சயமாக கிடைக்கும் உங்களுக்கு அதிகமாகப் பிடித்ததை உணர்வோடு செய்திடுங்கள்.

உங்கள் வாழ்க்கை அபரிமிதமாக அமையும்