You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சாதனையார்களின் தோல்விகள் - முழு நம்பிக்கையே வெற்றிக்கு வழி

2018-08-31


ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த மேஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் முதல் படத்தில் முதல் பாடலுக்கு ட்யூன் போடும்போது மின்சாரம் தடைபட்டதால் சகுனம் சரியில்லை என்று மனமுடைந்து போகவில்லை .


ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படமான ரோஜாவில் முதல் பாடலுக்கு இசையமைக்க எந்த வாத்திய கலைஞர்கள் வரவில்லை என்பதால் சகுனம் சரியில்லை என்று இசையை கைவிடவில்லை .


டைனோசர் மற்றும் ஜாஸ் திரைப்படங்கள் மூலம் உலகின் சிறந்த இயக்குனராக மாறிய ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் மூன்று முறை திரைப்பட கல்லூரியில் சேர முயன்று நிராகரிக்கபட்டவர்.
சீனாவில் அலிபாபா டாட்காம் (சுமாராக நாளன்றுக்கு 30 மில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை) நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா கல்லூரியில் மூன்று முறை நுழைவு தேர்வில் தோல்வி அடைந்தவர்.
முப்பது முறை வேலைக்கான தேர்வில் தோல்வி அடைந்தவர். இரண்டு முறை பிசினஸ் தொடங்கி தோல்வி அடைந்தவர். பலமுறை பள்ளியில் நடந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்.
அலிபாபா டாட்காம் முதல் மூன்று வருடங்களுக்கு ஒரு பைசா கூட லாபம் சம்பாதிக்கவில்லை.


வீட்டை சுத்தம் செய்யும் vaccum cleaner ரை உருவாக்கும் முன் ஐந்தாயிரம் முறை முன்மாதிரி மாடல்களை உருவாக்கினர் ஜேம்ஸ் டைசன் 


பிரபல திரைப்பட பாடகர் ஜேசுதாஸ் தொடக்க காலத்தில் வேலை தேடும்போது ஆல் இந்தியன் ரேடியோவில் நடந்த குரல் தேர்வில் குரல் சரியில்லை என்று நிராகரிக்கப்பட்டவர்
நேரம் சரியில்லை என்று சொல்வதை கைவிடுங்கள். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்வதையும் கைவிடுங்கள். 
நல்ல நேரம் , கெட்ட நேரம் என்பது உங்கள் மனதை பொறுத்துதான் உருவாகிறது.


நம்பிக்கையோடு மட்டும் செயல்படுங்கள். நீங்கள் மனதால் நூறு சதவித நம்பினால் வெற்றி உங்களை அடைந்தே தீரும்.
மேதைகளுக்கும், வெற்றி அடைந்தவர்களுக்கும் எப்படி வெற்றி அடைய போகிறோம் , எப்படி நடக்கும் என்று தெரியாது.. ஆனால் வெற்றி அடைய போகிறோம் என்பது மட்டும் நன்கு தெரியும்