You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நேர்மறையான எண்ணங்களை விதையுங்கள் வெற்றி உங்களை தேடிவரும்.

2018-09-03


வாழ்வில் மிகபெரிய துன்பங்களுக்கு முகம்கொடுக்கும் பலர் எண்ணுவது  “வாழ்க்கையில் ஏழ்மை என்னை துரத்தி கொண்டே  இருக்கிறதே. நானும் முடியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.” என்பது தான்.


எந்த ஒரு பிரச்சினைக்கும் பயந்த ஓடுவது சரியான தீர்வு ஆகாது. அதனை எதிர்கொண்டு நிற்பதே சரியன தீர்வை அடையக் கூடிய சிறந்த வழி.


நாம் ஒரு துன்பத்தில் இருக்கும் போது இந்த நிலை மாறும் என்ற எண்ணம் எம்மனதில் உறுதியாக பதியுமானால் நிச்சையம் அது கூடிய விரைவில் நடக்கும் எண்ணங்களுக்கு எப்படி அவ்வளவு சக்தி வந்தது என்று யோசிக்கின்றீர்களா?


எண்ணங்களுக்கு சக்தி உங்கள் நம்பிக்கையே நீங்கள் உங்கள் எண்ணங்களின் மீது முழுமையான நம்பிக்கை வையுங்கள் அதனை திரும்ப திரும்ப எண்ணி கொண்டிருங்கள் ஏன் அவை நிறைவேரியதாகவே சிந்தியுங்கள்.


நாமே நமது எண்ணங்களை நம்ப மறுத்தால் எல்லா எதிர்மறை வினைகளும் நம்மை சுத்தி நிற்கும் எப்போது தாக்கலாம் என்று.
நம்பிக்கை எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்  எதில் என்றால் நம் எண்ணங்களில். அடுத்தவனை எளிதாக நம்பி விட்டு பிறகு ஏமாந்தும் போவோம், ஆனால் நம் நேர்மறையான எண்ணங்கள் மீது அதீத நம்பிக்கை கொள்ள தயங்குவோம். அதில் தயக்கம் கூடாது. நடக்கும் ஆம் நடத்தி காட்டுவேன். முயற்சி தான் வெற்றிக்கான படி  முயலுவேன் மீண்டும் முயலுவேன். இது போன்ற தீவிர நேர்மறை எண்ணங்களை மனதில் கொண்டு தீவிர படுத்தி கொண்டே இருந்தால் தோல்வி நம்மை நெருங்காது. 


தன்னம்பிக்கை, முயற்சி, ஆக்கம்,ஊக்கம்,வெற்றி, முடியும், என்ற பல வடிவங்களில் நம்முடன் இருக்கின்ற நேர்மறையான ஆற்றல்களை பயன் படுத்தி சிகரம் தொட்டவர்கள் பலர் உலர்.
வாழ்க்கை என்ன தான் புழுதியில் கிடத்தினாலும், தன்னம்பிக்கையோடு எழுந்து போராடுபவரே இயற்கைக்கு சவால் விட்டு எழுந்து சிகரங்களை தொடுகின்றனர்.


உலக போரில் ஒரே நாளில் அமெரிக்க குண்டுகளுக்கு தன் தொழிற்சாலை தரைமட்டமாகி போனதால் சோய்ச்சிரோ ஹோண்டா இடிந்து போய் உட்கார்ந்து தன் கனவினை தூக்கி போட்டு இருந்தால் மோட்டார் பைக் உலகின் ஜாம்பவான் ஹோண்டா நிறுவனத்தை உலகம் அறிந்து இருக்காது. 


தனக்கு கேன்சர் என்பதை நினைத்து மனம் வெறுத்து வீட்டில் முடங்கி போய் இருந்தால் சர்வதேச சைக்கிள் சாம்பியன் லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங்கை உலகம் அறிந்து இருக்காது.


குடும்ப வறுமை சூழ்நிலைக்காக அப்பா சேகர் இருக்கும்போது ஆசையாக வாங்கிய இசை வாத்தியங்கள் அனைத்தையும் கண் முன்னே விற்கும் வேதனையை கண்டு மனம் வெறுத்து போய் அவ்வளவு தான் என்று நினைத்து இருந்தால் ஏ.ஆர்.ரஹ்மானை உலகம் அறிந்து இருக்காது. படிப்பை பாதியில் விட்டு பள்ளி செல்லும் வயதில் குடும்ப பொறுப்பை ஏற்று, ஒரு காலத்தில் கிபோர்ட் வாங்க கூட வசதியில்லாத ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நூற்றாண்டின் இசை உலகின் அடையாளம்


தனக்கு காது கேட்கும் குறையை நினைத்து மனம் வெறுத்து போய் தற்கொலை செய்ய நினைத்து இருந்தால் உலக புகழ்பெற்ற சிம்போனிகளை பீதொவேனால் படைத்து இருக்க முடியாது. 


மேதைகளுக்கும், வெற்றி அடைந்தவர்களுக்கும் எப்படி வெற்றி அடைய போகிறோம் , எப்படி நடக்கும் என்று தெரியாது. ஆனால் வெற்றி அடைவோம் என்பது மட்டும் நன்கு தெரியும். நீங்கள் நம்பிக்கையோடு மட்டும் செயல்படுங்கள் வெற்றி உங்களை தேடிவரும்.