You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மழை நீரில் நனைவது ஆரோக்கியம் தரும் இயற்கை மருத்துவம்

2018-09-06


மழை நீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளிபிடித்து, காய்ச்சல் வந்தால், அவன் ஆரோக்கியமாக இல்லை, எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். 


மழையை கண்டால் ஒதுங்குபவர்களும் உண்டு மழையில் நனைந்து மகிழ்பவர்களும் உண்டு உண்மையில் மழையில் நனையலாமா? 
இந்த சந்தேகம் ஏன் வருகின்றது எனில் மழையில் நனைவதால் நாம் தலைவலி மற்றும் சளி போன்ற உடல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதனால் தான். மழை இயற்கை தரும் கொடை, மழை நீர் தூய்மையானது என அறிகிறோம் அப்படி இருக்க மழையில் நனைவதால் ஏன் நோய்கள் ஏற்படுகின்றது. 


இதற்குக் காரணம் மழையில் நனைபவரின் ஆரோக்கிய குறைபாடே, ஆரோக்கியமான ஒருவர் மலையில் நனையும் போது அவர் மேலும் பொழிவு பெறுகின்றார். புத்துணர்ச்சி அடைகின்றார். 
சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாகப் பிராண வாயு இருக்கிறது. நமது உடலில் உள்ள அனைத்து கலங்களும் அந்த பிராணவாயுவை உறிய ஆரம்பிக்கிறது. அதனால் கலங்களில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றது. ஆகவே தான் மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி, தும்மல், காய்ச்சல் போன்றன ஏற்படுகின்றது. 
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறான் எனில் மழையில் நனையும் போது அவனுக்கு சளிபிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டும். 
எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பார்த்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. மழையில் நனைவது ஒரு மருத்துவம். மழையில் நனைவதன் மூலம் சில நோய்களை குணப்படுத்த முடியும்.


இதே போன்று மழைநீரை குடிப்பதன் மூலமாகவும் நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தலாம். 
மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரை குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும், குப்பைகளும், வாகனங்களிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும் வானத்தில் இருக்கும். 


முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்த தூசுகள், குப்பைகளை பூமியை நோக்கி கொண்டு வரும் எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்கு பின் வரும் மழைநீரை நேரடியாக பாத்திரத்தில் மூலமாகவோ, ஒரு கலனை பயன்படுத்தி அந்த நீரை பிடிக்கவேண்டும். 
இந்த நீர் உலகிலேயே மிகவும் சுத்தமான தூய்மையான நீர். இதில் பிராண வாயு அதிகமாக இருக்கும். இந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் காற்று புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு வருடங்களுக்கு கெட்டுபோகாமல் இருக்கும். ஆனால் அந்த தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும். எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கலாம். 


குழந்தைகள் மழையில் நனைவதை நாம் அனுமதிப்பதில்லை ஆனால் அதிலும் இயற்கை மருத்துவம் உள்ளது எனவே மழையை கண்ட ஒளியாமல் அதனுடன் இனைந்த மகிழலாம். இதனால் உடல் மட்டும் அல்ல மனமும் ஆரோக்கியம் அடையும்.