You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கல்லில் எழுதப்படவேண்டிய ஏழுத்துக்கள்

2018-10-10


இரு நண்பர்கள் ஒரு காட்டில் நீண்ட பயணம்  ஒன்றை மேற்  கொண்டனர்.  ஒருவன் சற்று  செல்வம்படைத்தவன்  மற்றவனோ ஏழை. பயணத்தின் ஓரிரு நாட்களிலேயே ஏழைக் கொண்டு வந்த உணவு மற்றும்தண்ணீர் தீர்ந்து விட்டது. 


எனவே அவன் தனது நண்பனிடம் உதவிக் கேட்டான். அவனோ தன்னுடைய  உணவு தீர்ந்து  விட்டால்  தான்பசியில் சாக  நேரும் எனக்  கூறி மருத்து விட்டான் கவலை கொண்ட நண்பன் காட்டில் இருந்த ஒரு  மரத்தின்இலையில்  “எனது நண்பன் என்னை  பட்டினியில்  தவிக்கவிட்டான் ” என எழுதி வைத்தான். 
இவ்வாறு இருவரும் பயணத்தை தொடர்ந்தனர். ஓரிரு  நாளில்  மற்றைய   நண்பனிடம் இருந்த  உணவும்தீர்ந்தது.  உணவின்றி  படும்  அவதியை  உணர்ந்தான் அவன் தனது பிழையை  எண்ணி  வருந்தினான். 
சிறிது தூரம் செல்லும் போது ஒரு இடத்தில் சிறிது தண்ணீர் இருந்தது. பணக்கார  நண்பன் ஏழை நண்பனைஅழைத்து நீ தான்  அதிக  நாள் உணவின்றி இருக்கின்றாய் எனவே நீ இந்த நீரை பருகு என  விட்டுக்கொடுத்தான். 


அவனும் பசி மிகுதியால் நீரை பருகி நண்பனுக்கு  நன்றி  கூறினான்.  பின் அங்கிருந்த கல்லில் ”எனதுநண்பன் மிக நல்லவன் எனது  உயிரை   காப்பாற்றியவன்” என எழுதி வைத்தான். 


அப்போது அங்கு ஒரு தேவதை தோன்றியது அந்த ஏழை நண்பனிடம் உன் நண்பன் தீங்கு செய்த போதுஇலையில் எழுதி வைத்தாய், நண்மை செய்தபோது கல்லில் எழுதிவைத்தாயே அது ஏன் என கேட்டது. அதற்கு அவன் தீமைகள் காற்றுடன் போய்விட வேண்டியவை  அதனை  மறந்த விடவே இலையில்எழுதினேன், நன்மைகள் கல்லில்  எழுதப்பட்ட எழுத்து போல் அழியாது இருக்க வேண்டும் எனவே தான்அதனைக் கல்லில் எழுதினேன். எனக் கூறினான். 


அவனின் உயர்ந்த உள்ளத்தை பாராட்டிய தேவதை இருவருக்கும்  உணவு கொடுத்து உதவியது.