You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தர்மன் செய்த தவறு

2018-10-28


கிருஷ்ணன்  பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன்.  அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன்.  தன் தங்கை சுமித்ராவை  கூட ,  அர்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கின்றான்.  


இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,  நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள்.  கிருஷ்ணன்  நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியும். ஆனால் கிருஷ்ணன்  அவ்வாறு செய்யவில்லை, இதனை கிருஷ்ணன்  இடம் கேட்ட போது
அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.


சூதாடுவது என்பது அரச தர்மம்.  தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை.  ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று திரியோதனன் சொன்னான்.  
ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான்.  தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால்,  முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.  
தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்   என்றார்.

தான் என்ற செருக்கு அழிவை தருவது, ஒருவரின் செயலால் உலகமே அழியும் அளவிற்கு தீமை விளையும் எனில் நாம் செருக்கு விடுத்து அனைத்தும் இறைவனே என்ற பக்குவ நிலையை அடைய வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும்.