You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை - ஸ்ரீ ஸ்ரீ ஷண்முகானந்தா சுவாமிகள் பேச்சு

2019-01-03


 ஸ்ரீ கிருஷ்னா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்தி வரும்எப்போ வருவாரோ என்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான ஜனவரி 2ஆம் திகதி புதன்கிழமை கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் மண்பத்தில் இடம் பெற்றது.  மாலை 6 மணிக்கு ஆரம்பமான நகழ்வில் இமயமலயிலிருந்து வந்த 95 வயதுடைய துறவி ஸ்ரீ ஸ்ரீ ஷண்முகானந்தா சுவாமிகள் சொற்பொழிவு ஆற்றினார், அதனை தொடர்ந்து நிகழ்வில் கண்ணப்ப ஓதுவார் அருளிசை பாடினார். 

ஸ்ரீ ஸ்ரீ ஷண்முகானந்தா சுவாமிகளின் சொற்பொழிவு

இந்த பிரபஞ்சம் முழுவதும் ஆத்ம சக்தி நிரம்பியிருக்கின்றன, தவம் மூலமாக தான் அதை அடைய முடியும். இந்த தபசிகளுக்கு நேரம் காலம் இல்லாமல் பெரும் தவம் புரிந்திருக்கிறோம், ஆக பெரும் ஆத்ம சக்தியை புரிந்து கொண்டதால் தான் உணவு இல்லாத இடத்திலும் இருக்க முடிந்தது. உணவு ஒவ்வொருக்கும் மிக பெரிய கொடை, அதை எப்படி கையாள்வது, அதற்கு தான் இயற்கையோடு ஒன்றியிருக்க வேண்டும். 

உணவே மிக பெரிய செல்வம், இங்கு யாரால் எந்த சிக்கலுமின்றி (நோயின்றி) உணவை புசிக்க முடிகிறதோ அவனே பெரும் செல்வந்தன் ஆவான். இருப்பினும் உண்பதோடு மட்டும் கடமை முடிந்து விடுவதில்லை, நான் துறவரம் செல்லும் என் அம்மாவிடம ”நான் போய்ட்டு வரேன்” என்று சொன்னேன் அதற்கு ”நான் பல சாதுகளுக்கு அளித்த உணவு உண்மையாக இருந்தால் உனக்கும் செல்லும் இடமெல்லாம் உணவு கிடைக்கும் என்றாள் அம்மா”. 

ஆம், உணவு வேண்டி நம்மிடம் யார் வந்தாலும் மறுதலிக்காமல் உணவு கொடுக்க வேண்டும், அது யாராக இருந்தாலும் உணவின்றி தவிப்பது பாவம், இன்று வரை என் ஆசிரமத்திற்கு யார் வந்தாலும் சாப்பிடாமல் போவது கிடையாது. அன்று, அதை தான் வள்ளலாரும் சொன்னார் அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்று. அதுவே நம்மை ஆனந்தம் அடையச் செய்யும் என்றார். நூற்றுக்கணக்கான மக்கள் சொற்பொழிவினைக் பக்தியுடன் கேட்டனர்.