You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




புத்தர் கண்ட பேரின்பத்தை இப்பிறப்பிலேயே அடையலாம்

2019-01-06


புத்தர் மனிதராக பிறந்து கடவுளாக உயர்ந்து நிக்கின்றார். புத்தரை வழிபடுவது அவருக்கு நாம் காட்டும் மரியாதையின் காரணமாக மட்டுமே. அவர் கண்ட அமைதி நிலையை நாமும் காண வேண்டும் எனில் அவர் காட்டிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும். புத்தர் வரம் கொடுக்கும் சாமி இல்லை. அமைதியான வாழ்வுக்கு வழிகாட்டும் நண்பர். அவரை வழிபடுவதால் மட்டுமே நாம் துறவு நிலையை அடையமுடியாது. அவரின் அறிவுரைப்படி வாழ்வை புறிந்து கொள்ளுதல் வேண்டும்.


புத்தர் வாழ்க்கைக்கு மிகமுக்கியமான ஐந்து ஒழுக்கங்களை கூறியுள்ளார்.


1. எந்த ஒரு உயிரையும் கொல்லுதலைத் தவிர்த்தல்
2. கொடுக்காத எப்பொருளையும் எடுப்பதைத் தவிர்த்தல்
3. தவறான பாலியல் உறவுகள் கொள்ளாது இருத்தல்
4.தவறான பேச்சு உரைக்காமல் இருத்தல்; (பொய் சொல்வதும், 
வதந்தி கிளப்புவதும், கடுமையாகப் பேசுவதும், வம்பளப்பதும் 
தவிர்த்தல்)
5. போதையளிக்கும் எப்பொருளையும் உட்கொள்ளுதலைத் தவிர்த்தல் 

எவர் ஒருவர் புத்தர்  சொன்ன அறவழி நடக்கின்றாரோ அவர் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் ஆகின்றார். இவரின் செயல்கள் பிறரின் நலன் பேணுவதாகவே அமையும். இவ்வாறு இல்லாமல் சுய நலத்திற்காக மட்டுமே அறத்தைப் பயில்வது என்பது புத்தரின் வழி தர்மம் ஆகாது.


   புத்தர் உபதேசித்தப்படி தர்மத்தை சரிவரப் பயின்றால், ஜாதி மத பேதமின்றி, குடும்ப அந்தஸ்து, பால், அதிகார வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும், புத்தர் கண்ட அமைதியை, பேரின்பத்தை இவ்வுலகிலேயே, இப்பிறப்பிலேயே காண்பது நிச்சயம்.  


    சுருக்கமாகச் சொல்வதென்றால் பௌத்தப் பயிற்சி என்பது கருணை (compassion) மற்றும் நுண்ணறிவு (wisdom) ஆகிய இரண்டையும் ஒருசேர வளர்த்தல்  தான்.  கருணை என்பது உள்ளம் சம்பந்தப்பட்டது. நுண்ணறிவு என்பது சித்தம்  சம்பந்தப்பட்டது. கருணையை வளர்த்து நுண்ணறிவை வளர்க்கா விட்டால் நல்லுள்ளம் கொண்ட முட்டாளாகி விடுவோம். நுண்ணறிவை மட்டுமே வளர்த்துக் கருணையை வளர்க்காவிட்டால் கல்நெஞ்சங்கொண்ட அறிவாளியாகத்தான்  இருப்போம்.


இவ்விரண்டு பண்புகளையும் ஒருசேர வளர்த்துக் கொள்வதே  நமது வினையாக இருத்தல் வேண்டும்.   இவ் நிலையே நமக்கும் பிறருக்கும் நன்மை உண்டாக்குவது ஆகும்.