You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உங்கள் மன உரையாடல் நேர்மறையாக இருந்தால் உறவுகள் பலம் பெறும்

2019-01-07



எப்போதும் நேர்மறையான எண்ணங்களே எம்மை நிம்மதியாகவும் மகிழ்சியாகவும் வைக்கின்றன. நாம் எமது வாழ்வில் அதிகம் நேசிக்கும் நபர்களிடம் அதிக ஏதிர்பார்பார்ப்புகளை ஏற்படுத்தி கொள்கின்றோம். அவர்களுடன் கலந்து போசவேண்டிய விடயங்களை நம் மனதில் அவர்களின் கதாபாத்திரங்களை உருவாக்கி கொண்டு பேச தொடங்குகின்றோம். இது நெருக்க மானவர்களிடம் தொடங்கி நாம் அன்றாடம் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் நடந்து கொள்ளும் முறையாக உள்ளது. 


இதன் காரணமாக நமது வாழ்வில் நாம் இழந்தவை அதிகமாக இருக்கும். அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று நம் மனதுக்குள்ளாக அவரிடம் எதிர்மறையாக பேசி கொள்கிறோம்.. இதற்கு பெயர் மன உரையாடல்கள் (Mind Conversations).


நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இந்த மன உரையாடல்கள் முக்கிய காரணமாக அமைகிறது..
ஒருவரை பற்றி அவரிடம் நாம் நேரடியாக பேசும் வார்த்தைகள் மட்டுமன்றி அவரை பற்றி நம் மனதுக்குள் நிகழும் மன உரையாடல்களும் அவருக்கும் நமக்குமிடையேயான புரிந்துணர்வை நிர்ணயிக்கிறது.


உங்களுக்கும் வேறொருவருக்கும் இடையேயான உறவுமுறையில் சரியான புரிந்துணர்வு இல்லையெனில் அவரை பற்றி உங்களுக்குள் நிகழும் மன உரையாடலை கவனியுங்கள்.


நேரில் பேசும்போது எவ்வளவு அன்பாக நீங்கள் பேசியிருந்தாலும், அவரை பற்றி உங்கள் மனதில் நிகழும் உறையாடலில் நீங்கள் அவரை பற்றி குறை கூறினால், நிச்சயம் உங்களுக்கிடையேயான புரிந்துணர்வு பாதிக்கும்.


ஏற்கனவே புரிந்துணர்வில் பாதிப்படைந்த ஒருவரைப் பற்றி உங்கள் மனதில் நேர்மறையான உரையாடலை நீங்கள் கற்பனை செய்தால் உங்கள் உறவுமுறை முன்பை விடவும் அதிக பலம் பெறும்..