You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்று ஶ்ரீ மகோதய புண்ணிய காலம் சேர்ந்து வரும் அபூர்வ தை அமாவாசை. பித்ரு வழிபாட்டிற்கு சிறந்த நாள்

2019-02-04


அமாவாசை தினத்தில் முன்னோரை வழிபடுவது தர்ப்பனம் கொடுப்பது என்பன இந்துவாகிய நாம்  ஒவ்வொருவரம் செய்யவேண்டிய மிகமுக்கிய கடமையாகும்.


இவ்வருடம் தை அமாவாசையானது எப்போதாவது ஒரு முறை அபூர்வமாக வாய்க்கும், பல புண்ணிய பலன்களை அளிக்கும் ஶ்ரீ மகோதய புண்ணிய காலம் சேர்ந்து வருகிறது. இதனால் மிகமிகக் கூடுதல் சிறப்பு வாய்ந்தது இவ் தினத்தில் தர்ப்பனம் செய்தல் கோடி புண்ணியம்  தருகின்றது.

தை அமாவாசை
அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்கான நாள் என்பதை நாம் அறிவோம். அதிலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் வடக்கு திசை நகர்வான உத்ராயன புண்ணிய காலத்தில் வருவதால் கூடுதல் பலன்கள் தருவதாகக் கருதப்படுகிறது. 
சாஸ்திரங்களின் படி  புண்ணியகாலங்களாக கருதப்படும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மூன்று மாதங்களில் வரும் அமாவாசைகளில் சமுத்திரத்தில் நீராடி முன்னோர்களை வழிபட்டு நீர்க்கடன் செலுத்துவது சிறப்பு.சூரியனின் வடக்கு திசை நகர்வான உத்ராயன புண்ணிய காலத்தில் தை அமாவாசை  வருவதால் கூடுதல் பலன்கள் தருவதாகக் கருதப்படுகிறது. 


முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவம் உணர்த்தும் புராண கதை


ஜரத்காரு என்ற ரிஷி நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்குச் செல்லும் வல்லமை படைத்தவர். ஒருநாள் இருட்டான பாதையில் நடந்து போனார். அப்போது சன்னமாகக் குரலில் பலர் முனகுவது கேட்டது
ஆத்மாக்கள் சில பலவீனமாகக் குரல் எழுப்பிக்கொண்டிருந்தன. அவை ஒரு வேரைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த வேரும் இற்றுவீழும் நிலையில் இருந்தது. அந்த வேர் அறுந்தால் அவர்கள் நரகத்து நெருப்பில் விழும் நிலையில் இருந்தார்கள். ஜரத்காரு அவர்களிடம், 'நீங்கள் யார் ? உங்களுக்கு ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது?' என்று கேட்டார்.


அதற்கு அந்த ஆத்மாக்கள், " பாவாத்மாக்களாகி இருளில் கிடக்கும் எங்களுக்கு அன்னமும், நீரும் வார்க்கச் சந்ததியில்லை. இருக்கும் ஒரே மகனும் இல்லறத்தில் ஈடுபடாதிருக்கிறான். அதனால் நாங்கள் பசியிலும் தாகத்திலும் தவிக்கிறோம்" என்று சொன்னார்கள்.

அதற்கு ஜரத்காரு, "அப்படியா, தங்களைத் தவிக்கவிட்ட மகன் யார்?" என்று கேட்டார். அதற்கு  அவர்களோ, "அவனைக் குறை சொல்ல விரும்பவில்லை. காரணம் அவன் சத்யசந்தன். அவன் பெயர் ஜரத்காரு" என்று சொல்லக் கேட்டு ஜரத்காரு வருத்தமடைந்தார். தன்னால் அவர்கள் வாடும் நிலை ஏற்பட்டதை நினைத்து வருந்தினார். பின் தனக்கு இணையான பெண்ணைத் தேடி மணந்து தன் பித்ரு கடனைத் தீர்ப்பதாக வாக்களித்தார். அதன்படி அவர் திருமணம் செய்து தன் கடமைகளை நிறைவேற்றினார்.  இந்த நிகழ்வு மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். அதன் மூலம் அவர்களுக்கு நற்கதி கிட்டுவதோடு நமக்கும் நம் சந்ததிக்கும் வாழ்வில் வளங்களும் சேரும். 

மகோதய புண்ணியகால பலன்
பொதுவாக அமாவாசை அன்று தர்பணம் செய்வது வழக்கம். எல்லா அமாவாசையிலும் அதை நிறைவேற்றத் தவறியவர்கள் அல்லது வழிபாட்டில் ஈடுபடமுடியாதவர்கள், இன்று அதைச் செய்து பலன் பெறலாம். அமாவாசை திங்கள் அன்று திருவோணம், அவிட்டம், அசுவினி, திருவாதிரை, ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களோடு நிகழ்ந்தால் 'மகோதய புண்ணியகாலம்'என்றும் குறிப்பிடுவர். இந்த நாள்களில் நதிகளில் அல்லது சமுத்திரத்தில் நீராடி முன்னோர் வழிபாடும் இறைவழிபாடும் செய்ய, கோடி சூர்யகிரகணத்தன்று வழிபாடு செய்த பலன்கள் கிட்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.