2019-02-05
உடல் நலத்துக்குப் பொதுவான தூய்மையைப் பேணுதல் போல ஆரோக்கியமான மனதை உருவாக்க நன்மையான சிந்தனைகளை அளிக்க வேண்டும். ஆரோக்கியமான உரையாடல்கள், சமூகப் பங்கேற்பு, புதிய மனிதர்களைச் சந்தித்தல், தியானம் ஆகியவற்றின் மூலம் சிந்தனையை சிறந்த வழியில் கொண்டு செல்ல முடியும்.
மனதில் தோன்றும் எண்ணங்களை ஆழ்மனதிற்கு அனுமதிக்கும் முன்பு அந்த எண்ணங்கள் எமக்கு ஆரோக்கியமானதா எமது வாழ்க்கைக்கு நன்மைதர கூடியதா என ஆறாய்தல் வேண்டும். தீமையான எண்ணங்களை ஆழ்மனதிற்கு கொண்டு செல்வதை தவிர்ப்பதன் மூலம் தேவையில்லாத மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகளை தவிர்க முடியும்.
அடுத்ததாக, நமது அன்றாடக வாழ்க்கையில் நாம் தொடர்ந்து விரும்பத் தகாதவற்றை எதிர்கொள்ள நேரிடும் போது நமது ஆரோக்கியமான மனநிலையில் தாக்கம் ஏற்படுத்தும். முடியுமானவரை அச்செயலை தவிர்த்து கொள்ளுங்கள். அல்லது மனதிற்கு அச்செயலின் முக்கியத்துவத்தை உணர்த்தி விருப்பத்தடன் செயற்பட செய்யுங்கள்.