You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க இப்படியும் சில வழிகள்

2019-02-06


மகிழ்ச்சி என்பது நமது மனதின் தேவை. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் சிறந்த சிந்தனைகள் எமக்குள் தோன்றுகின்றது. வாழ்வை முன்நோக்கி எடுத்துச் செல்வதற்கான சக்தியும் நம்பிக்கையும் இதன் மூலமாகவே எமக்குக் கிடைக்கின்றது. தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளின் போது எமது மனதை மகிழ்ச்சியாகப் பேணுவது கடினமான விடயம். ஆனாலும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தச் சோகம் எம்மைவிட்டுச் சென்று விடுகின்றது. மனம் கடினமான சூழ்நிலையில் இருந்து எம்மை மீட்கின்றது. ஆகவே நிரந்தரமில்லாத கவலையை மனதிற்குத் தூரமாக வைப்பது மனதில் நீடித்த அமைதியை ஏற்படுத்துகின்றது. 


இப்படியான சந்தர்ப்பங்கள் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் நாம் நமது மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியமாகின்றது. அன்றாட வாழ்வில் நடை பெறும் நிகழ்வுகளை மிகப்பெரிய பிரச்சினையக கருதுவதால் மனதில் சோகமும் விரக்தியும் ஏற்படுகின்றது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பும் கோபமும் உண்டாகுகின்றது. இவ் நிலையில் இருந்து வெளியில் வர நமது மனதிற்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன் மூலம் மனதை மகிழ்ச்சியாகப் பேணமுடியும். 

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பொதுவாகவே யாருக்கும் தீமை நினைக்க மாட்டார்கள். நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் செயலைச் செய்ய வேண்டும். எப்போதும் சரியான செயலே நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும் என்பதை மறந்து விடக்கூடாது. 

பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள் 
நமக்கு வரும் பிரச்சனைகளை கண்டு பயந்து ஓடினால், அவை அப்படியேதான் இருக்கும், தீரவே தீராது. அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டுபிடித்தால், தூசி போல் அவை ஓடிவிடும். 

அடுத்தவர்கள் விடயத்தைப் பற்றி தேடுவது 
அலுவலகமாக இருந்தாலும் அயலவர்களாக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை நாம் ஆராயக்கூடாது. நமது வேலையை நாம் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். நமது மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

உங்கள் மகிழ்ச்சி உங்கள் கையில் 
உங்களுடைய மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம். குடும்பம் நண்பர்கள் என யாரையும் சார்ந்ததாக உங்கள் மனதின் மகிழ்ச்சி இருக்கக் கூடாது. உங்களுக்குப் பிடித்த செயல்களை நீங்கள் செய்யவும் உங்களுக்காக வாழவும் ஒரு நாளின் சில மணித்தியாலங்களைச் செலவிடுங்கள். நீங்கள் மற்றவர்களுக்காக உங்கள் மனதிடம் பேசி மாற்றிய விடயங்களை உங்கள் ஆழ்மனது இன்னும் விரும்புகின்றது. எனவேதான் நீங்கள் செய்யும் எந்தச் செயலிலும் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதில்லை. மீண்டும் நீங்கள் நீங்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்.