You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




எது சிறந்த வழிபாடு

2019-02-07


ஒரு அரசர் காட்டின் மத்தியில் இறைவனை எண்ணி தியானம் செய்து கொண்டிருந்தார். அந்த வழியாக தன் கணவரை தேடி பதட்டத்தில் ஒரு பெண் ஓடினால். அவள் ஓடும் போது அவளின் முந்தனை அரசரின் முகத்தில் மோதிச் சென்றது. ஆனால் அந்தப் பெண் அதை பொருட்படுத்தாமல் கடந்து சென்றால் இதை பார்த்த அரசருக்குக் கோபம் மேலிட்டது. அவர் இறை தியானத்தில் இருந்ததால் அவளை விட்டுவிட்டு தமது தியானத்தைத் தொடர்ந்தார். 


சிறிது நேரத்தில் தியானத்தில் இருந்து எழுந்தார் அரசர். மீண்டும் அப்பெண் அவ்வழியில் திரும்பினால். அவளை கண்ட அரசர் ஏ பெண்ணே நான் இங்குத் தியானத்தில் இருக்கும் போது என்னை மதிக்காமல் உனது சேலை என் முகத்தில் படும்படியாக என்னைக் கடந்து சென்றாய், நான் யார் தெரியுமா? என்றார். 
அதற்கு அப்பெண் கூறினாள். அரசே என்னை மன்னித்து விடுங்கள் எனது கணவரை காணாத பதட்டத்தில் நான் உங்களைக் கவனிக்கவில்லை ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நான் எனது கணவரின் மீது கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் என் நிலை மறந்தேன் நீங்கள் இறைவன் மீது கொண்ட பக்தி சிறந்தது என்றால் நீங்கள் தியானத்தில் இருக்கும் போது எப்படி நான் உங்களைக் கடந்து சென்றதை உணர்ந்திருக்க முடியும். உண்மையான வழிபாடு என்பது இறைவனை மனதார நினைப்பது தானே. 


அரசருக்கு தமது பிழை புரிந்தது ஒரு சாதாரண பெண்ணிடம் இருந்து தமக்கு அறிவு புகட்டியமைக்கு இறைவனுக்கு நன்றி கூறினார் அவர்.