You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சமயங்கள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டவே உருவாகின! பதினெண்சித்தர் தமிழின குருபீடத்தின் அறிக்கை

2019-03-10


சமயங்கள் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டவே உருவாகின. இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற சனநாயக நாடு. இங்கு ஒவ்வொரு சமயத்தவரும் தங்களது மத வழிபாட்டு நிகழ்வுகளை எவ்வித தடைகளுமின்றி நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என பதினெண்சித்தர் தமிழின குருபீடம் இலங்கைக் கிளை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் மன்னார், திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவு சேதமாக்கப்பட்மை இனங்களுக்கு இடையில் முறுவல் நிலையை ஏற்படுத்தி இருந்தது.  இவ் சம்பவம் தொடர்பில்  பதினெண்சித்தர் தமிழின குருபீடத்தின் இலங்கைக் கிளையின் துணைத்தலைவர் ச.சனப்பிரியன் மற்றும் செயலாளர் சே.மணிசேகரன் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


இயேசுபிரான் தனது மக்களுக்காக தன்னை வருத்தினார். மதமாற்றம் செய்வோர், பிறமதங்களை அவதூறு செய்பவர்களை கிறிஸ்தவர் என கருதமுடியாது என பைபிள் கூறுகின்றது. இந்நிலையில் சைவர்களின் பாரம்பரியத்தில் மிக முக்கிய நிகழ்வான சிவராத்திரி தினத்திற்கு முதல்நாளன்று பாடல்பெற்ற பஞ்ச ஈசுவரங்களுள் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலயத்தின் வரவேற்பு வளைவு சில கிறிஸ்தவ மக்களால் அகற்றப்பட்டமையானது பைபிளின் வாசகங்களை மறுதலிப்பதாக அமைந்திருந்தது. இச்செயலாலானது கிறிஸ்தவத்தை சரிவரப்பின்பற்றும் கிறிஸ்தவர்களையும் கவலைக்குள்ளாக்கியிருந்தது. எனவே, குற்றமிழைத்தவர்கள் இனம்காணப்பட்டு நல்லிணக்க அரசாங்கம் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன், இனிமேலும் இவ்வாறான கசப்பான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் வாழப்பழகிக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.