You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கீதையின் 18 அத்தியாயங்களின் சாரம் 18 வரிகளில்...

2019-03-11


உலக ஆசையில் மூழ்கி போர்களத்தில் செயலிழந்து நின்ற அருச்சுனனின் மாயயை விளக்கும் பொருட்டு உபதேசிக்கப்பட்டது பகவத் கீதை. அர்ச்சுனனின் நிலையில் இருக்கும் நாம் ஒவ்வொருவரும் பிறவா பெருவாழ்வை அடைய ஸ்ரீமத் பகவத்கீதையின் உபதேசங்கள் இன்றி அமையாதவை. கீதையின் உபதேசங்களை ஒருவரியில் ஒப்புவிப்பது கடிணம் என்றபோதும் தமிழ் மொழியின் வளத்தைகொண்டு அதனை சுருக்கமாக கூறலாம். இவ் சுருக்கத்தை படிக்கும் ஒவ்வொருவரும் கீதையை முழுமையாக அறிய ஆவல் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
கீதையின் 18 அத்தியாயங்களில், இன்றைக்கும் என்றைக்கும் நமக்குப் பயன்படும், இதனை மனதில் நிறுத்தி செயல்களை முன்னெடுப்பதால் வாழ்க்கையை நாம் சுகமாக வாழலாம். கீதையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, 18 அத்தியாயங்களில் 18 சாரம் இங்கே உங்களுக்காக.. 

அத்தியாயம் 1
வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நம் தவறான சிந்தனை மட்டுமே காரணம். 

அத்தியாயம் 2 
நம் அனைத்து இன்னல்களுக்கும் இறுதித் தீர்வைத் தருவது, நம் அறிவு மட்டுமே. 

அத்தியாயம் 3 
முன்னேற்றத்துக்கும் வாழ்க்கை வளத்துக்கும் ஒரே வழி, சுயநலமின்மைதான். 

அத்தியாயம் 4 
ஒவ்வொரு செயலும் ஒரு பிரார்த்தனையின் விளைவாக இருக்கலாம். 

அத்தியாயம் 5 
நான் என்கிற அகந்தையைக் கைவிடு; எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு! 

அத்தியாயம் 6 
தினமும் உயர்ந்த விழிப்புஉணர்வு நிலையோடு இணைந்திரு. 

அத்தியாயம் 7 
எதைக் கற்றுக்கொண்டாயோ, அதன்படி வாழ்! (வள்ளுவர் `நிற்க அதற்குத் தக’ எனச் சொல்வதைப்போல) 

அத்தியாயம் 8 
உன்னை ஒருபோதும் நீயே கைவிட்டுவிடாதே! 

அத்தியாயம் 9 
உனக்குக் கிடைத்த வரங்களை (பேறுகளை) மதிப்பிடு! 

அத்தியாயம் 10 
எங்கெங்கும் தெய்வீகத்தை உணர். 

அத்தியாயம் 11 
உண்மையை, அது எப்படிப்பட்டதோ அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தேவை. 

அத்தியாயம் 12 
பகவானுக்குள் உன் மனத்தையும் இதயத்தையும் ஈர்த்து அவற்றைத் தக்கவைத்துக்கொள். 

அத்தியாயம் 13 
மாயையில் இருந்து விலகு; தெய்விகத்துடன் இணைந்திரு. 

அத்தியாயம் 14
உன் நோக்கத்துக்குப் பொருத்தமான வாழ்க்கைமுறையையே வாழப் பழகு. 

அத்தியாயம் 15 
தெய்விகத்துக்கு முன்னுரிமை கொடு. 

அத்தியாயம் 16 
நல்லவனாக இருப்பது ஒரு பரிசு, அதுதான் பரிசே!

அத்தியாயம் 17
மனதுக்குப் பிடித்ததைவிட, சரியானதைத் தேர்ந்தெடுப்பது ஆற்றலின் (அதிகாரத்தின்) அடையாளம். 

அத்தியாயம் 18 
பகவானுடன் ஒன்றிணைந்து நாம் நகர்வோம்; அவருடனேயே செல்வோம்.