You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே ஏற்றம் பெறும் - கீதை

2019-03-13


எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே ஏற்றம் பெறும் என்பதை உள்ளீடாக  உணர்த்துகிறது கீதை. ‘ஆனால், எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் வாழ்க்கையே எதற்கு?’ என எமது மனதில் வரும் கேள்விக்கு  பதிலும் கீதையில்தான் உள்ளது. 


நாம் நமது  வாழ்க்கை வட்டத்தில் செய்கின்ற ஒவ்வொரு செயலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் தான் செய்யப்படுகின்றது.  ஒரு குழந்தை பிறந்தது முதல் இறக்கும் வரை ஆசையின் காரணமாக செயல்களில் ஈடுபடுகின்றான், இவ் செயல்கள் ஒவ்வொன்றும் பல எதிர்ப்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்படுபவை ஆகும். அவனின் எதிர்பார்ப்புகள் நிரைவு அடையாத பட்சத்தில் அது துன்பமாக உணரப்படுகின்றது. நாம் அனுபவிற்கும் துன்பம் இன்பம் இரண்டும் எமது செயலின் விளைவினால் எமக்கு கிடைக்கின்றது.

செயற்படுவதால் தான் இவற்றை அனுபவிக்கும் நிலை ஏற்படுகின்றது. எனவே செயல்களில் ஈடுபடாமல் இருந்துவிட்டால் இந்த இன்ப துன்பங்களில் இருந்து விடுபட்டுவிடலாம் என நீங்கள் நினைத்தால் அங்குதான் சிக்கல் எழுகின்றது. 
நீங்கள் செயலில் ஈடுபடுவதற்கே பிறவி எடுத்துள்ளீர்கள். செயலில் ஈடுபடுவதன் மூலமே இன்ப துன்பங்களுக்க அப்பாற்பட்ட நிலையை ஆன்மா அடையமுடியும். நீங்கள் செயலை செய்யமட்டுமே படைக்கபட்டுள்ளீர்கள் விளைவுகள் உங்களுக்கு உறியது அல்ல. செயலினால் வரும் விளைவுக்கு நீங்கள் காரணம் இல்லை என உணருகின்றபோது தான் வாழ்க்கை எதிர்பார்ப்பு அற்றதாகின்றது. தர்மத்தின் படி தூய்மையான மனநிலையுடன் செய்யும் செயலின் விளைவுகள் உங்களை சார்ந்தது அல்ல.  இதையே பகவத்கீதை ஒவ்வொரு ஆன்மாவிற்கும் விளக்க முட்படுகின்றது. கீதையின் தத்துவம் படி வாழ ஆரம்பித்தால் வாழ்க்கை எளிமையாகும் என்பதில் ஐயமில்லை