You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருக்க புத்தர் கூறும் வழிகள்

2019-03-14


ஒரு சமயம் திக்ஹஜானு என்ற ஒருவன் புத்தரைத் தரிசித்தான்.

“ஐயனே!  ங்கள்எல்லாம் சாமானியர்கள். குடும்பம், மனைவி, மக்கள் என்று வாழ்ந்து வருபவர்கள். எங்களைப் போன்றோருக்கு இந்த உலகத்திலும் அதற்குப் பின்னரும் சந்தோஷத்தைத்தரும் விஷயங்கள் என்னென்ன என்பதைச் சொல்லி அருள வேண்டுகிறேன்” என்றுஇறைஞ்சினான்.

புத்தர் கருணை கூர்ந்து அவனை நோக்கி இப்படி அருளினார்:

“இந்த உலகத்தில் சந்தோஷத்தை அடைவதற்கு நான்கு விஷயங்கள் உள்ளன.

முதலாவது உத்தான சம்பதம்.

ஒரு மனிதனானவன் திறமை வாய்ந்தவனாகவும், தொழில் நேர்த்தி கொண்டவனாகவும்ஆர்வம் உடையவனாகவும், மிகுந்த சக்தி வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். இதுதான் உத்தான சம்பதம்.

இரண்டாவது அர்த்த சம்பதம்.

தர்மமான வழியில் தான் சம்பாதித்த பணத்தை அவன் நன்கு நெற்றியில் வியர்வை சிந்த அதைப் பாதுகாக்க வேண்டும். இது தான் அர்த்த சம்பதம்.

மூன்றாவ்து கல்யாண மித்தம்.

அவன் நல்ல நண்பர்களைக் கொண்டிருத்தல் வேண்டும். நல்ல விசுவாசமான, சம்பாதிக்கின்ற, நல்ல காரியங்களைச் செய்யும், தாராள மனதைக் கொண்டிருக்கும்புத்தி கூர்மை மிக்க நண்பர்களை அவன் கொண்டிருத்தல் வேண்டும். அப்படிப்பட்டநண்பர்கள் தீமையான வழியில் அவனைச் செல்ல விடாமல் நல்ல வழியில் நடத்திச்செல்பவர்களாக இருத்தல் வேண்டும்.

நான்காவது சம ஜீவிகதம்.

அவன் தனது வருவாய்க்குத் தக்க விதத்தில் நியாயமான வழியில் செலவழிக்கவேண்டும்.அதிகமாகவும் செலவழிக்கக் கூடாது; குறைவாகவும் செலவழிக்கக் கூடாது. பேராசையுடன் செல்வத்தைச் சேமித்து வைக்கக் கூடாது; ஊதாரியாக இஷ்டப்படி செலவழிக்கவும் கூடாது. அதாவது தன் வருவாய்க்குத் தக்க விதத்தில் வாழ வேண்டும். இதுவே சம ஜீவிகதம்.

புத்தரின் அருளுரை திக்ஹஜானுக்கு மட்டும் கூறப்படவில்லை. மனித குலத்தில் சந்தோசம்  அடைய  விரும்பும்  அனைவருக்காகவுமே  உபதேசிக்கப்பட்டது.

இந்த நான்குமே மகிழ்ச்சியை அடைவதற்கான வழிகள். இதன் படி நடந்தால் மகிழ்ச்சியே  நீடித்து நிலைக்கும்.