You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




புறங் கூறல்

2019-04-11


அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் 
புன்மையாற் காணப் படும். 
(குறள் – 185)


புறங் கூறல்  என்பது ஒருவருடன் அவர் முன்னே முகமனாகப் பாராட்டி; புகழ்ந்து பேசி இன்முகம் காட்டி பழகி அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல் மற்றும்  அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும். 
இதை பற்றிதான் திருவள்ளுவர் திருக்குறளில்  புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்படும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர் இதனால் பகை வளரும். ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது. என கூறிள்ளார். 


ஒருவர் எமது நண்பராகவோ பகைவராகவோ இருக்கலாம் ஆனால் அவர் இல்லாத இடத்தில் அவருடைய  நற்குணங்களைப் பற்றி மட்டுமே பேசுதல் வேண்டும்.  அவரின் குற்றங்களை அவர் முன்னே எடுத்துக் கூறலாம். அதுவே சிறந்த நற்பிட்கும் உங்களின் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாகும். புறங்கூறுதலால் இருவருக்கு இடையிலோ ஒரு குழுவிற்கு இடையிலோ பிணக்கையும் பகையையும் வளர்ந்து பிரிவினைகளை உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையையும் இல்லை. தீமை மட்டுமே தரும். 
சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர். ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பவர்கள் வாழ்வில் என்றும் தோற்றுப் பேவதில்லை.


புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராது இதனாலயே  திருவள்ளுவர் புறங் கூறலை புன்மை என்றார். திருமுறையிலும் புறங் கூறல் பற்றி "குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்" என்று  கூறுப்பட்டுள்ளது.


பிறரின் குறைகள் பற்றி ஆராயும் ஒருவரால் தமது பிழைகளை அறிய  முடியாது போகின்றது. எனவே அவர் தமது வாழ்வின் முன்னேற்றப் பாதையை தவர விடுகின்றார். ஒருவரைப்பற்றி நாம் நோக்கும் விதத்தில் பிழை இருக்கலாம். அதனை ஒருவருடன் பேசும் போதுதான்  புரிந்து கொள்ள முடியும். 


பிழையான புரிதலால் ஒருவரைப் பற்றிய வதந்திகளை  உருவாக்காமல், சம்மந்தபட்டவரிடம் நேரடியாக பேசுவதன் மூலம் பிரச்சினைகளை குறைத்து வாழமான சூழலை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும்.