You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாளை சித்ரா பெளர்ணமி - முக்கனி வைத்து வழிபட்டால்....

2019-04-18


சித்ரா பெளர்ணமி நாளில், மா, பலா, வாழை வைத்து, பூஜிப்பதால், சகல ஐஸ்வர்யத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


மாதந்தோறும் பெளர்ணமி நாளில், முன்னோர்  வழிபாடு உட்பட பல  தெய்வங்களுக்கன விசேட வழிபாடுகள் நடத்துவது வழக்கம். இதிலும் சித்திரை நட்சத்திரமும் பெளர்ணமியும் சேர்ந்து வரும் சித்திராபெளர்ணமி மிகவும் விசேடமான நாள் ஆகும். 
இந்த வருடத்திற்கான சித்ரா பெளர்ணமி நாளைய தினம் (19.4.19). சுக்கிர வாரம் என்கிற வெள்ளிக்கிழமையில், வருகின்றது. 
அன்றைய தினம், அதிகாலையில் எழுந்து நீராடி, கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி மா, பலா, வாழை ஆகிய முக்கனி வைத்து, நைவேத்தியம் செய்து வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறலாம் என்கிறது சாஸ்திரங்கள். 


புண்ணிய நீராடல் 


சித்ரா பெளர்ணமி நாளில், சிறப்பு சேர்க்கும் செயலாக புண்ணிய நீராடல் கூறப்படுகின்றது.  இந்தநாளில், கடலில், ஆற்றில் என நீர்நிலைகளில் நீராடினால், மகா புண்ணியம்  என்கிறது சாஸ்திரம். மேலும் நீர்நிலைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கயின் ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறலாம். 

முக்கனி நைவேத்தியம்


சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பன்மடங்கு சக்தி உண்டு. முக்கியமாக, இன்றைய நாளில், முக்கனிகள் கொண்டு  நைவேத்தியம் செய்து, குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவது மிகவும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வழிபட வேண்டிய இறைவன்


சித்ரா பெளர்ணமியில், எமதருமனையும் சித்ர குப்தனையும் மனதார வழிபடுங்கள். அவர்களை மனதார வேண்டிக்கொண்டால், நோய்வாய்ப்பட்டவர்கள் பூரண குணமாகிவிடுவார்கள். தீராத நோயும் தீர்ந்துவிடும். நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கை அமையும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் மேலோங்கும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


மாலையில் விளக்கேற்றுங்கள். 


அதேபோல், மாலையில் பூஜையறையில் விளக்கேற்றி வீட்டு வாசலில் இரண்டு அகல்விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.  வீட்டு தெய்வங்களுக்கு தீபதூப ஆராதனைகள் செய்து குடும்பத்தார் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து  பூஜை நிறைவில் நைவேத்தியங்களை அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குதல் சிறப்புத்தரும். 


அதன் பின்பு அனைவரும்  வீட்டு வாசலில் இருந்தபடி, சந்திர தரிசனம் செய்தல் வேண்டும். இதுவரை உங்கள் வீட்டில் இருந்த தரித்திரமும் அமைதியின்மையும் குழப்பமும் அடியோடு விலகி , ஐஸ்வர்யமும் சுபிட்சமும் குடிகொள்ள  வேண்டும் என மனதார சந்திர பகவானிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.