You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்த 08 குணங்கள் போதும் இறைஅனுபவம் கிட்டும்

2019-05-15



இறைத்தன்மையை  உணர்வதற்கு வேதங்கள், உபநிடதங்களை கற்று அறிய தேவையில்லை வேதபாராயணம் பற்றி ஒரு வரி கூட தெரியாதவனுக்கு இறைஅனுபவம் கிடைக்கலாம் இதற்கு இறைவழிபாட்டில் வெளிவேடங்களை விடவும் இயல்பான வழிபாடே போதுமானது. ஆனால் ஒவ்வொருவரும் 8 வகை குணங்களில் உயர்ந்தவர்களாக தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும்.


அந்த 08 குணங்களும் இவைத்தான்


1. உலகில் உள்ள எல்லா உயிர்களிடமும் அன்புடன் இருக்க வேண்டும். கருணையை கைவிடக்கூடாது. இதை வலியுறுத்தவே, ‘அன்பே சிவம், அதுவே நலம்’ என்றனர்.

2. பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்.

3. மற்றவர்களை நினைத்து பொறாமைப்படக்கூடாது.

4. உடல், மனம், செயலில் எப்போதும் தூய்மையுடன் இருத்தல் வேண்டும்.

5. தன் முனைப்பின் காரணமாகவும், பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலி மிகுந்த உழைப்பு வேண்டும்.

6. எப்போதும் கலகலப்பாக இருக்க வேண்டும். இறுக்கமற்று இருக்க வேண்டும்.

7. எப்போதும் நல்ல நடத்தையுடன் இருக்க வேண்டும். தாராள மனதுடன் இருப்பது சிறந்தது.

8. எல்லா மோகங்களும் வலுவற்றவை, நிலையற்றவை என்பதை உணர வேண்டும்.