You are here : life

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மறுபிறவி பற்றி வேதம் என்ன சொல்கின்றது தெரியுமா?

2019-06-09


புனர்ஜன்மம் எனப்படும் மறுபிறவி, இயற்கையான பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பு நடைமுறையாகும். இறப்பின் போது, நாம் இந்த பூத உடலை உதறிவிட்டு, சூக்கும உடல்களில் இருந்தவாறு, உள் உலகங்களில் தொடர்ந்து பரிணாமம் அடைகின்றோம், மீண்டும் ஒரு பிறப்புக்குள் நுழையும் முன். பல காலமாக, மறுபிறவி கோட்பாடு இந்துக்களிடையே மிகப்பெறும் ஆறுதல் கூறாக இருந்துள்ளது, சாவைப்பற்றிய பயத்தை நீக்கி. நாம் வாழும் உடல் அல்ல நாம், ஆனால் அனாதியான ஆத்மா, அது பரிணாம வளர்ச்சியில், சம்சாரத்தில் பல உடல்களில் வாழ்ந்துள்ளது. இறப்புக்குப் பின், பார்வைக்கு அகப்படாத உலகங்களில் நாம் தொடர்ந்து இருந்து, உலகத்தில் செய்த காரியங்களுக்கு சுகத்தையோ துக்கத்தையோ அனுபவித்து, மீண்டும் ஒரு பூதவுடல் கொண்ட பிறவிக்காக காத்திருப்போம்.

கடந்த பிறவிகளில் நாம் செய்த காரியங்கள் அடுத்தப் பிறவியின் நிலைமை மற்றும் மனப்பாங்குகளாக உருவாகின்றது. கர்மம் தீர்க்கப்பட்டதும், கடவுள் அறியப்பட்டதும், மோட்சம் அடையப்பட்டதும் விளைவாக மறுபிறவி நீங்குகின்றது. வேதங்கள் பகருகின்றன,

“ இறப்புக்குப் பின், ஆத்மா அடுத்த உலகுக்கு செல்கின்றது. தான் செய்த காரியங்களின் நுட்ப பதிவுகளை மனதில் தாங்கியவாறு. அதற்கான பலன்களை அனுபவித்தப் பிறகு, காரிய உலகமான இங்கு மீண்டும் வருகின்றது. ஆக, இச்சை உள்ளவருக்கு மறுபிறவி வாய்க்க தொடர்ந்து வழி உண்டு”

( யஜுர்வேதம், பிரிஹதரன்யகா உபநிஷதம் 4.4.6).

சற்குரு போதிநாத வேலன்சுவாமிகள்