You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
அகிலம் போற்றும் அண்ணல் நபி

December 01 , 2017


அகிலம் போற்றும் அண்ணல் நபியின் ஜனன தினம் இன்­றாகும். உல­கெங்கும் வாழு­கின்ற முஸ்­லிம்கள் பெரு மகிழ்­வோடு  இதனை கொண்­டா­டு­கின்­றனர்.

உலகை சீர்திருத்த வந்த மாந­பியின்  வாழ்க்கை வர­லாறு உலக மக்­க­ளுக்கு படிப்­பி­னை­யாக அமைந்­துள்­ளது. அண்­ண­லாரின் சொல் செயல்கள் யாவும் மனித வாழ்க்­கைக்கு மிகச் சிறந்த முன்­னு­தா­ர­ணங்­க­ளாகும். நபி பெரு­மா­னாரின் வாழ்க்கை முழு­வதும் நடந்­துள்ள சம்­ப­வங்கள் நபியின் மாபெரும் சிறப்­புக்­க­ளையும் கண்­ணி­யத்­தையும்  வெளிக்­காட்­டு­கி­றது.

உல­குக்கு பேரொ­ளி­யாக உதித்த நபி­பெ­ரு­மானார்  அவர்கள் அன்றைய 'ஜாஹி­லிய' கால அறி­யாமை இருளை அகற்­றினார். மனம்­போன போக்கில் வாழ்ந்த மக்­களை சீர்­தி­ருத்­தினார். முஹம்மத் நபி­ய­வர்கள் மனித குலத்தில் மாபெரும் புரட்­சியை ஏற்­ப­டுத்­தினார். அவர்­களின் வரு­கையே மனித குல மீட்­சிக்கு அடித்­தள­மிட்­டது.

அல்­குர்ஆன்  நபி­ய­வர்­களின் சிறப்பை  பின்­வ­ரு­மாறு கூறு­கி­றது.

(நபியே) நிச்­ச­ய­மாக நீர் மிக உயர்ந்த மகத்­தான நற்­குணம் உடை­ய­வ­ராக இருக்­கின்றீர் (அல்­குர்ஆன் 68:4)

நபி­ய­வர்­களின் நற்­பண்­பு­களும்சிறப்­பு­களும்

நபி­ய­வர்­க­ளிடம் சிறு­வ­ய­தி­லி­ருந்தே வாய்­மை­யு­டைமை, தீமை­யின்மை, தூய ஒழுக்கம், கண்­ணிய உணர்ச்சி, கட்­டுப்­பா­டான தன்மை, உதவி செய்யும் மனப்­பான்மை, கட­மை­யு­ணர்வு, நம்­பிக்­கைக்கு மாறு செய்­யாமை, இரக்க மனப்­பான்மை, மனித நேயம் போன்ற இன்­னோ­ரன்ன அருங்­கு­ணங்கள் அள­வற்றுக் காணப்­பட்­டன.

நபி­ய­வர்­களின் வாலிப பரு­வத்தில் அவர்­களின் நேர்­மை­யையும் அவர்கள் இறைவன் மீது கொண்­டி­ருந்த அள­வற்ற பற்­றையும் குறித்து மக்கள் எல்­லோரும் பர­வ­லாகப் பேசி­னார்கள். அண்­ண­லாரை சுட்­டிக்­காட்டி 'இதோ! நம்­பிக்­கைக்­கு­ரிய மனிதர் சென்று கொண்­டி­ருக்­கி­றார்கள்' என்று  அவர்­களை மக்கள் பாராட்­டினர்.

வள்ளல் நபி­ய­வர்­களின் சொல்லும் செயலும் குர்­ஆ­னா­கவே இருந்­தது. ஒரு தடைவை ஆயிஸா (ரலி) அவர்­க­ளிடம் ஒருவர் வந்து நபி­ய­வர்­களின் பண்­பு­களை குறித்து கூறு­மாறு கேட்­டார்கள்.

அதற்கு ஆயிஸா (ரலி) அவர்கள் பின்­வ­ரு­மாறு பதி­ல­ளித்­தார்கள்.

'அவர்­களின் பண்­பு­களைக் குறித்து கூற­வேண்­டுமா? திருக்­குர்­ஆனின் கட்­ட­ளை­க­ளையே அவர்கள் போதித்­தார்கள். அதன் போத­னை­களே அவர்­களின் செயல்­க­ளாக விளங்­கின. அதில் கூறப்­பட்ட கட்­ட­ளை­க­ளுக்­கேற்­பவே  நடந்து காட்­டி­னார்கள். அவர்­களின் ஒவ்­வொரு செயலும் அல்­குர்­ஆனின் போத­னையாய் விளங்­கிற்று' என பதி­ல­ளித்­தார்கள்.

நபி­ய­வர்கள் தமது நாற்­ப­தா­வது வயதில் 'ஹிராக் குகையில் இறை வணக்கம் செய்து கொண்­டி­ருக்­கையில், அவர்­க­ளுக்கு அல்­குர்­ஆனின் முதல் 'வஹி' (இறை அறி­விப்பு) அரு­ளப்­பட்­டது.. இவ்­வேத வெளிப்­பாட்டின் மூலம் நபி (ஸல்) அவர்கள் இறை­வனின் தூத­ரா­னார்கள்.

ஹிராக் குகையில் வைத்து நபி­ய­வர்­க­ளுக்கு இறக்­கப்­பட்ட அந்த இறை அறி­விப்­புக்குப் பிறகு நபி­ய­வர்கள் அன்னை கதீஜா (ரலி) அவர்­க­ளிடம் சென்­றார்கள். அண்ணல் நபி­ய­வர்­களின் முகத்தில் பதற்­றத்தின் அறி­கு­றிகள் தென்­பட்­டன.

'தங்­க­ளுக்கு என்ன நடந்­தது? என கதீஜா (ரலி) அவர்கள் கேட்­டார்கள்.

நடந்த நிகழ்ச்சி முழு­வ­தையும் மனை­வி­யிடம் கூறிய நபி­ய­வர்கள்' என் போன்ற பல­வீ­ன­மான மனி­தனால் இச்­சு­மையை எவ்­வாறு சுமக்க முடியும்?  என்­றார்கள்.

இதற்கு கதீஜா (ரலி) அவர்கள் 'இறைவன் மீது ஆணை­யாக அவன் தங்­க­ளுக்கு இவ்­வ­ச­னங்­களை அரு­ளி­யதன் நோக்கம்  தாங்கள் தோல்­வி­யுற்­ற­வர்­க­ளா­கவும், தங்­களின் குறிக்­கோள்­களில்  தாங்கள் வெற்­றி­பெ­றா­த­வர்­க­ளா­கவும் ஆகி­விட வேண்டும்  என்­ப­தற்­கன்று. மேலும் இறைவன் உங்­க­ளுடன் இருப்­பதை கைவி­டு­வ­தற்கும் அன்று. அவன் ஒரு­போதும் அவ்­வாறு செய்­ய­மாட்டான்.

தாங்­களோ உயர்ந்த பண்­பு­களைப் பெற்றுத் திகழ்­கின்­றீர்கள். உற­வி­னர்­க­ளுடன் இனி­மை­யாக நடந்­து­கொள்­கின்­றீர்கள்.  உத­வி­யற்­ற­வர்­களின் சுமையை சுமக்­கின்­றீர்கள். நாட்­டி­லி­ருந்து அழிந்­து­விட்ட நற்­பண்­பு­க­ளெல்லாம் தங்­களின் மூலம் மீண்டும் நிலை நாட்­டப்­படு­கின்­றன. விருந்­தோம்பல் செய்­கின்­றீர்கள். உண்­மை­யான துன்­பத்­திற்­குள்­ளான மக்­க­ளுக்கு உதவி செய்­கி­றீர்கள். இவ்­வா­றான உயர்ந்த பண்­பு­க­ளைக்­கொண்ட மனி­தனை இறைவன் சோத­னைக்­கா­ளாக்கி விடு­வானா? என்­றார்கள். (புகாரி)

சமா­தானத் தூதர் சாந்தி நபி

இஸ்லாம் என்ற பதத்தின் கருத்து சாந்தி, சமா­தானம், சகோ­த­ரத்­துவம் என்­ப­தாகும். நபி­ய­வர்­களின் சொல், செயல், அங்­கீ­காரம் யாவுமே சாந்தி, சமா­தானம், சகோ­த­ரத்­து­வத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றது. அவ­ரது முழு வாழ்க்­கையும் அது­வா­கவே அமைந்­துள்­ளது.

அந்த வகையில் நபி­ய­வர்கள் சமா­தா­னத்தை நிலை நிறுத்­து­வதில் அளித்த பங்­க­ளிப்பை வர­லாறு சான்று பகர்­கி­றது.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள்  தமது தோழர்­களைப் பார்த்து  'உங்­களில் தொழுகை, நோன்பு, ஸக்காத் இவை­க­ளை­வி­டவும் மேன்­மை­யான நன்மை தரக்­கூ­டிய காரி­யத்தை அறி­விக்­கட்­டுமா? அதுதான் உங்கள் இரு­வ­ருக்­கி­டையில் சமா­தானம் செய்து வைத்தல்' என்று கூறி­னார்கள்.

அண்ணல் நபி­ய­வர்கள் மக்­காவில் சமா­தா­னத்தை நிலை நிறுத்த முயன்­றாலும், மதீ­னா­விற்கு ஹிஜ்ரத்  சென்­றதன் பின்னர் அதில் பெரு வெற்றி கண்­டார்கள். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் புதி­ய­தொரு சமூ­கத்தின் தலைவர் என்ற வகையில் மதீனா சென்­றதும் பல  ஆரம்ப நட­வடிக்­கை­க­ளையும் சில அமைப்­பு­க­ளையும் உட­ன­டி­யாக  செய்ய வேண்­டி­யி­ருந்­தது. அங்கு   நபி­ய­வர்கள் மேற்­கொண்ட  ஒவ்­வொரு நட­வ­டிக்­கையும் இஸ்­லா­மிய சமூக அமைப்­புக்­காக சமா­தா­னத்தின் அடிப்­ப­டையில் எழுப்­பப்­பட்ட திட்ட அம்­சங்­க­ளாகும்.

அன்று ஹவுஸ், கஸ்ரத் கூட்­டத்­தா­ருக்கு மத்­தியில் பரம்­ப­ரை­யாக இருந்து வந்த குலச் சண்­டையை நீக்கி இரு கூட்­டத்­தா­ருக்­கு­மி­டையில் சமா­தா­னத்தை செய்து வைத்து சகோ­த­ரத்­துவ ஒற்­று­மையை நிலை நிறுத்­தி­னார்கள்.

அதே­வேளை, மக்­கா­வி­லி­ருந்து மதீ­னா­வில் ஹிஜ்ரத் செய்த முஹா­ஜி­ரீன்­க­ளுக்கும் மதீ­னா­வா­சி­க­ளான அன்­சா­ரீன்­க­ளுக்­கு­மி­டையில் இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவப் பிணைப்­பினை ஏற்­ப­டுத்­தி­னார்கள். இதன் மூலம்  சகோ­த­ரத்­து­வத்தின் வழி பிறப்­ப­துதான் சமா­தானம் என்ற கோட்­பாடு நிலை நிறுத்­தப்­பட்­டது.

முஸ்­லிம்­க­ளுக்­கி­டையில் சமா­தா­னத்தைநிலை நிறுத்­தி­யதைத் தொடர்ந்து முஸ்­லிம்­க­ளுக்­கி­டை­யேயும் ஏனைய சமூ­கத்­தி­ன­ருக்­கி­டை­யேயும்  ஐக்­கி­யத்­தையும் ஒத்­து­ழைப்­பை­யும் பாது­காப்­பையும் வளர்த்­துக்­கொள்­வ­தற்கு  இரு தரப்­பி­ன­ருக்கும் பொதுவான அர­சி­ய­ல­மைப்பை தழு­விய ஓர் சமா­தான உடன்­படிக்­கையை செய்து கொண்­டார்கள். இது ஒரு­பக்­கத்தில் முஹா­ஜி­ரீன்­க­ளையும் அன்­சா­ரீன்­க­ளையும் மறு­பக்­கத்தில் யூதர்­க­ளையும் மதீ­னாவில் வாழ்ந்த ஏனைய கோத்­தி­ரத்­த­வர்­க­ளையும் கருத்­திற்­கொண்டு வரை­யப்­பட்­ட­தாகும். அது மதீனா சாசனம், மதீனா பிர­க­டனம், மதீனா பட்­டயம் என அழைக்­கப்­ப­டு­கி­றது.

முஹம்­மது நபி­ய­வர்கள் சமா­தான விருப்பம் கொண்­ட­வர்கள் என்­பதை இன்னொரு சம்­ப­வமும் எடுத்­துக்­காட்­டு­கி­றது. சமா­தான விரும்­பி­யான வள்ளல் நபி­ய­வர்கள்  மக்கா குறை­ஷி­யர்­க­ளுடன்  செய்­து­கொண்ட 'உதை­பியா உடன்­ப­டிக்கை'  அது­வாகும். இந்த உடன்­ப­டிக்­கையை மக்­கா­வா­சிகள் இரண்டே ஆண்­டு­களில் 'பனூ­கு­ஸாஆ' வம்­சத்­தி­னரை தாக்­கி­யதன் மூல­மாக மீறி­னார்கள். நபி­ய­வர்கள் பத்­தா­யிரம் முஸ்­லிம்­க­ளுடன் மக்­காவை நோக்கிப் படை­யெ­டுத்­தார்கள். இரத்தம் சிந்­தாமல் மக்கா கைப்­பற்­றப்­பட்­டது. மக்கா இஸ்­லாத்தின் வச­மா­னது. ஹிஜ்ரி 8 இல் மக்கா வெற்றி கொள்­ளப்­பட்ட பின்னர் எதி­ரிகள் எதிர்­பா­ரா­த­வாறு அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. இது நபி­ய­வர்­களின் உயர்ந்த  பண்பை எடுத்­துக்­காட்­டு­வ­துடன் அவர்கள் ஒரு சமா­தான விரும்பி என்­பதை விளக்கி  நிற்­கி­றது.