You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அல்குர்ஆன் கூறும்மனிதனின் தோற்றம்

February 22 . 2018


மனிதன் எதி­லி­ருந்து படைக்­கப்­பட்டான் என்­பதை கவ­னிக்­கட்டும்.  குதித்து வெளிப்­படும் (ஒரு­துளி) நீரினால் படைக்­கப்­பட்டான். முதுகுத் தண்­டிற்கும் விலா எலும்­பிற்கும் இடை­யி­லி­ருந்து அது வெளி­யா­கி­றது. (அல்­குர்ஆன் 86: 5-7)

மனி­தனை இரத்தக் கட்­டி­யி­லி­ருந்து அவன் (அல்லாஹ்) படைத்தான். (அல்­குர்ஆன் 96:  2)

மனி­தர்­களே (இறுதித் தீர்ப்­புக்­காக நீங்கள்) மீண்டும் எழுப்­பப்­ப­டு­வது பற்றி சந்­தே­கத்தில் இருந்­தீர்­க­ளானால் (அறிந்து கொள்­ளுங்கள்) நாம் நிச்­ச­ய­மாக உங்­களை (முதலில்) மண்­ணி­லி­ருந்தும் பின் இந்­தி­ரி­யத்­தி­லி­ருந்தும் பின்பு (அலக் எனும்) இரத்தக் கட்­டி­யி­லி­ருந்தும் பின்பு உரு­வாக்­கப்­பட்­டதும் உரு­வாக்­கப்­ப­டா­த­து­மான தசைக் கட்­டி­யி­லி­ருந்தும் படைத்தோம். (அல்­குர்ஆன் 22:  5)

நிச்­ச­ய­மாக (முதல்) மனி­தனை களி மண்ணின் மூலச் சத்­தி­லி­ருந்து படைத்தோம். பின்னர் (அதற்­கென உள்ள பாது­காப்­பான இடத்தில் (கர்ப்­பப்­பையில்) நாம் அவனை இந்­தி­ரியத் துளி­யாக்­கினோம். பின்னர் இவ்­வி­ரத்தக் கட்­டியை மாமிசத் துண்­டாக படைத்தோம்.

பின்னர் அம்­மா­மிசத் துண்டை எலும்­பு­க­ளாகப் படைத்தோம். பின்னர் அவ்­வெ­லும்­பு­க­ளுக்கு மாமி­சத்தை அணி­வித்தோம். பின்னர் நாம் அதனை வேறு படைப்­பாக (முழு மனி­த­னாக) உரு­வாக்­கினோம். ஆகவே படைக்­கின்­ற­வர்­களில் மிக அழ­கா­ன­வ­னான அல்லாஹ் மிக உயர்­வா­னவன்.

( அல்­குர்ஆன் 23:  12- 14)

பெண்ணின் கர்ப்­பப்­பையில் தரிக்கும் ஆண் விந்து நாள­டைவில் குறிப்­பிட்ட பல கட்­டங்­க­ளாக வளர்ந்து ஒரு சிசு­வாக உரு­வாக்­கப்­ப­டு­வதை அல்­குர்ஆன் மிகத் தத்­ரூ­ப­மாக பேசி­யுள்­ளது. அதை "முறை­யியல்" (Embryoiogy) என்பர்.

அல்­குர்ஆன் வரு­கைக்கு முன் உலகம் பல நாக­ரி­கங்­களைக் கண்­டுள்­ளது. குறிப்­பாக கிரேக்க ஞானிகள் மனி­த­வாழ்வு பற்­றிய தத்­து­வார்த்­தங்­களை இயம்­பி­யுள்­ளனர். ஆனால் அல்­குர்ஆன் குறிப்­பி­டு­வ­து­போன்று மிக நுணுக்­க­மான ஒரு சிசுவின் தோற்றம் வளர்ச்சி பற்­றிய உண்­மையை அல்­குர்­ஆ­னுக்கு முன்னர் மட்­டு­மல்ல, அது இறக்­கப்­பட்டு பல நூற்­றாண்­டு­க­ளுக்கு பின்னர் கூட எந்த அறி­வியல் விற்­பன்­னரும் குறிப்­பி­ட­வில்லை.

அறிவு விருத்தி கண்ட பதி­னெட்டு,  பத்­தொன்­பதாம் நூற்­றாண்­டு­க­ளிலும் அல்­குர்­ஆனின் மேற்­கு­றித்த உண்­மைக்கு புறம்­பான மாற்றுக் கருத்­தொன்றை இவ்­வி­ட­யத்தில் முன்­வைக்க மனி­தனால் இய­லாமல் போய்­விட்­ட­தெனில் இவ்­வுண்­மையை அவனால் நிரா­க­ரிக்க முடி­ய­வில்லை என்­பதே பொரு­ளாகும்.

கீத் மூர் (Keeth Moor) என்ற அறிஞர் மானிட வளர்ச்சி தொடர்­பான தனது ஆய்­விலும் அப்துல் மஜீத் ஸன்­றானி அவர்­க­ளுடன் இணைந்து மேற்­கொண்ட குர்­ஆனின் அறி­வியல் (Quaranic Science) தொடர்­பான ஆய்­விலும் முறை­யியல் சிசு உரு­வாக்கம் சம்­பந்­தப்­பட்ட  குர்­ஆனின் கருத்தை ஸ்திரப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அவ்­வா­றெனின்,  அறிவு விருத்­தி­ய­டை­யாத ஒரு காலப்­பி­ரிவில் நாடோடி சமூ­கத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரி­யாத ஒருவர் இத்தகு நுணுக்கமான ஒரு விடயத்தை படிமுறையான ஒழுங்கில் சொல்லியிருக்க முடியுமா? நிச்சயமாக இதைக் கூறியவன் படைப்பாளனாகிய அல்லாஹ்வேயன்றி வேறொருவனாக இருக்க முடியாது.  இதுவே அல்குர்ஆனின் அற்புதக் கருத்தாகும்.